ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஆர்சிபி அணி கைப்பற்றியது. ஐபிஎல் தொடரிலே இதுவரை அதிக ரசிகர்களைக் கொண்டு கோப்பையை வெல்லாத அணியாக இருந்த ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால் அந்த ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி வங்கதேச அணி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதைப்போல் ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி ரசிகர்கள் என்று சொன்னால் மிகையாகாது. இந்த நிலையில் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஆர் சி பி ரசிகர்கள் கண்முன் தெரியாமல் கூட்டமாக மைதானத்திற்கு முன்பு கூடி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பிரச்சினைக்கு மேல் பிரச்சினை:
இதில் பல துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக தற்போது ஆர்சிபி அணி பல்வேறு சிக்கல்களை சந்தித்து இருக்கிறது. போலீசார் அனுமதி மறுத்தும் கூட்டத்தை கூடியது தான் பிரச்சனைக்கு காரணம் என்பதால் ஆர்சிபி அணி நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரச்சனை தலைக்கு மேல் செல்வதால் rcb அணியில் உரிமையாளரான டியாகோ அணியை விற்க முடிவெடுத்திருக்கிறது.சாம்பியன் பட்டத்தை வென்றதும் அணி உரிமையாளர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று மீண்டும் பட்டத்தை தக்க வைத்து பெங்களூர் மக்கள் முன் கோப்பையை அடுத்த வருடம் வெல்ல வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது திடீர் முடிவை எடுத்திருக்கிறார்.
17 ஆயிரம் கோடிக்கு விற்பனை?
ஆர் சி பி அணியின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 17,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. இந்த மொத்த பணத்தையும் கொடுத்தால் புது உரிமையாளர் அணிக்குள் வருவார். அவர்கள் அணியின் பெயரையே மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது இருக்கும் உரிமையாளர் மதுபான நிறுவனத்தை சேர்ந்தவர் என்பதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரையே வைத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: வீடியோ.. மைதானத்தின் மேற்கூரையை உடைத்த ரிஷப் பண்ட்.. பயிற்சியில் வெறிக்கொண்டு சிக்சர்
தற்போது வேறு ஒரு நிறுவனர் அணியை வாங்கினால் rcb அணியின் பெயரையே மாற்றும் நிலை ஏற்படும். இதனால் ஆர் சி பி அணியின் சகாப்தம் முடிவுக்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆர் சி பி ரசிகர்கள் ஓவராக டான்ஸ் ஆடி தற்போது அணியையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டதாக மற்ற அணி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.