ருதுராஜ் நீக்கம்.. கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. புள்ளிவிபரத்தில் மேலே இருந்தும் பரிதாபம்.. ரசிகர்கள் கோபம்

0
272
Ruturaj

இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கு அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் ருதுராஜுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதே சமயத்தில் சுப்மன் ககில் இரண்டு அணிக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது ரசிகர்களிடையே இது கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

இன்று அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார், சுப்மன் கில் துணைக் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா இருந்த போதிலும் சூரியகுமார் கேப்டன் ஆகவும் சுப்மன் கில் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்திலிருந்து மாற்று துவக்க ஆட்டக்காரராக உருவாக்கப்பட்டு வந்த ருதுராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு பிறகு அந்த இடம் அவருக்கே கிடைக்கும் என்று ஆரம்பத்தில் இருந்து பலரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டதோடு, துணை கேப்டனாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்.

எனவே ருதுராஜுக்கு வெள்ளைப் பந்து வடிவத்தில் இரண்டு அணிகளிலுமே வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைப்பதும் கடினமாகியிருக்கிறது. ஏனென்றால் ஒரு பக்கத்தில் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் உறுதியாக இருக்கிறார். இன்னொரு இடத்துக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லுக்கு துணைக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எதிர்கால கேப்டன் ஆக பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் 20 போட்டிகளில் 40 ரன் ஆவரேஜில், 143 ஸ்ட்ரைக் ரேட்டில், 4 அரைசதம் மற்றும் 1 சதத்துடன் 633 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேவேளையில் சுப்மன் கில் 19 போட்டிகளில் 30 ரன் ஆவரேஜில், 139 ஸ்ட்ரைக் ரேட்டில், 3 அரைசதம் மற்றும் 1 சதத்துடன் 505 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் கில்லை விட ருதுராஜ் பவுண்டரி சிக்ஸர்கள் அதிகமாக அடித்திருக்கிறார். அத்தோடு அவரைவிட டாட் பந்துகள் குறைவாக விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க : இலங்கை 2 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. ருதுராஜ், அபிஷேக் நீக்கம்.. ரோகித் கோலி வருகை

இப்படி எல்லாமே ருதுராஜுக்கு சாதகமாக இருந்த போதிலும் கூட, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்ததோடு, அவரைத் துணை கேப்டன் ஆக்கி, எதிர்கால இந்திய கேப்டனாகவும் பார்ப்பது ரசிகர்களை மிகவும் கோபம் அடைய வைத்திருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக ருதுராஜின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரைஎழுதப்பட்டது போல அமைந்திருக்கிறது. எனவே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -