இலங்கை 2 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. ருதுராஜ், அபிஷேக் நீக்கம்.. ரோகித் கோலி வருகை

0
1135
Gill

இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இன்று இரண்டுக்குமே 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். மேலும் துணைக் கேப்டனாக சுப்மன் கில் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த அணிக்கு விராட் கோலி திரும்பி இருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக கேஎல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சனுக்கு இந்த அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

மேலும் அறிவிக்கப்பட்ட இரண்டு அணியிலும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியிருக்கிறார். ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஷிவம் துபே இடம் பெற்றிருக்கிறார். இத்தோடு அறிமுக வீரர்களாக ரியான் பராக் மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து அறிவிக்கப்பட்ட t20 தொடருக்கான இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். மேலும் இந்த அணிக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக தொடர்கிறார். ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற்ற ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் ரியான் பராக்குக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருக்கிறார்கள். அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் இரண்டு அணிகளிலும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ரோகித் டிராவிட் எனக்கு செஞ்ச அந்த விஷயத்துக்கு.. எப்பவும் நன்றி உள்ளவனா இருப்பேன் – ஷிவம் துபே பேட்டி

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில் (து.கே), விராட் கோலி, கேஎல் ராகுல் (வி.கீ), ரிஷப் பந்த் (வி.கீ), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது மற்றும் ஹர்ஷித் ராணா.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :

சூர்யகுமார் யாதவ் (கே), சுப்மான் கில் (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (வி.கீ ), சஞ்சு சாம்சன் (வி. கீ), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது. சிராஜ்.

- Advertisement -