இந்திய டி20 கேப்டனாக ருதுராஜ் நியமனம்.. ஆசிய விளையாட்டு போட்டியில் ரிங்கு சிங்கிற்கு இடம்

0
1013

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய கிரிக்கெட் போட்டியில் 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அப்போது இந்திய அணியை பிசிசிஐயை  அனுப்பவில்லை.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டிய முயற்சியில் ஐசிசி ஈடுபட்டு வருகிறது. இதற்கு முதல் படியாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சீனாவில் கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதால் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறது. இதில் இந்திய அணியை அனுப்பலாமா வேண்டாமா என்று யோசனையின் பிசிசிஐ  இருந்தது. இதற்கு காரணம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு அணியை அனுப்பலாமா என்ற சந்தேகத்தில்
பி சி சி ஐ இருந்தது. ஆனால் தற்போது அதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வு குழு இன்று மும்பையில் கூடி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறது.

இதில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியிலே சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ், இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதேபோன்று அறிமுக டெஸ்டில் சதம் விளாசி அசத்திய ஜெய்ஸ்வால், ராகுல் திருபாதி ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்று ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும் ,சபாஷ் அகமதும் அணியில் தேர்வாகி இருக்கிறார்கள். இதேபோன்று ரவி பிஷ்னாய் தனி சுழற் பந்துவீச்சாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். வேக பந்துவீச்சில் ஆவேஷ்ஸ் கான், ஆர்ஸ்தீப் சிங்,முகேஷ் குமார்,சிவம் மவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோன்று ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்திருக்கிறது. கூடுதல் விக்கெட் கீப்பராக பிராப்சிமரன் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் ஸ்டான்ட் பை லிஸ்டில் யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.