உலக கோப்பையில் ரூல்ட் அவுட் ஆகி.. உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் 2 வீரர்கள்.. ஆச்சரியப்படுத்தும் விபரங்கள்!

0
2996
Axar

தற்போது இந்தியாவில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் நவம்பர் 19ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

உலகக்கோப்பை தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பாக சில நட்சத்திர வீரர்கள் காயத்தின் காரணமாக தங்களது அணிக்கு விளையாட முடியாமல் உலகக் கோப்பை தொடரை தவறவிட்டார்கள்.

- Advertisement -

இதில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா, தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளர் நோர்க்கியா, ஆஸ்திரேலியாவுக்கு சுழற் பந்துவீச்சுக்கு முக்கியமான ஆஸ்டன் அகர் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கியமானவர்கள்.

தற்போது இப்படி காயம் அடைந்து உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட யாரும் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக சரியாகி வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் உலகக் கோப்பை தொடருக்கு இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்ச்சர் படையில் சென்ற வருடத்தில் இருந்து இந்திய ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து வந்தார்.

- Advertisement -

ஆசியக்கோப்பை தொடரில் எதிர்பாராத விதமாக காயம் அடைய அவர் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அவருடைய இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடுகிறார்.

ஆனால் தற்போது காயம் குணமடைந்து அக்ச்சர் படியில் சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் குஜராத் அணிக்காக பங்கேற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்.எனவே அவருக்கு இது நல்ல பயிற்சியாக அமையும்.

அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தென் ஆப்பிரிக்க அணியை அறிவிக்க சில நாட்கள் இருந்த பொழுது வேகபந்துவீச்சாளர் சிசண்டா மகலா காயம் அடைந்தார். இதன் காரணமாக இவரது பெயரை கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் அறிவிக்க முடியவில்லை.

அதே சமயத்தில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று இவர் விளையாடினார். இவருடைய காயத்தின் தன்மை அறிந்து இவர் தேவை என்றால், உலகக் கோப்பை அணியில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்கா வேறொரு யோசனையில் ஒரு ஆல் ரவுண்டர் இடம் சென்று விட்டது.