இந்திய டி20 கிரிக்கெட் புதிய பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று மூத்த வீரர்கள் இந்திய டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். தற்போது இவர்களது இடத்தை நிரப்ப இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்கிறது. இந்த நிலையில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தை ருதுராஜ் நிரப்புகிறாரா? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ருதுராஜ் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார். வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் அவர் மூன்றாவது இடத்தில் வருகிறார்.
முதல் போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 7 ரன்ளில் ஆட்டம் இழந்த அவர் இரண்டாவது போட்டியில் 77 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய டி20 அணியில் விராட் கோலியின் மூன்றாவது இடத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பாரா? என்பது குறித்து பேச்சுகள் ஆரம்பித்து இருக்கிறது.
இந்த விஷயம் குறித்து தற்பொழுது அவரே நேரடியாக பேசியிருக்கிறார்.அதில் மிகப்பெரிய வீரரான விராட் கோலியின் இடத்தை தான் நிரப்ப முடியுமா என்கின்ற பேச்சே மிகப்பெரிய விஷயம் என்பதாகவும், மேலும் அது சரியானது இல்லை? என்றும் கடினமானது என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “இது உண்மையில் ஒரு பெரிய செய்தி. அவருடன் ஒப்பிடுவது அல்லது அவரது இடத்தை நிரப்புவது என்பது சரியான விஷயம் கிடையாது. ஏனென்றால் இந்த ஒப்பீடு தவறானது மற்றும் கடினமானது. இதே போல் தான் ஐபிஎல் தொடரில் மஹி பாய் இடத்தை நிரப்புவதும். நீங்கள் சொந்தமாக உங்களுடைய விளையாட்டை விளையாடி உங்கள் வாழ்க்கையை தொடங்குகிறீர்கள். ஐபிஎல் தொடருக்கு சொன்ன பதிலைத்தான் இதற்கும் சொல்கிறேன்.
இதையும் படிங்க : டேவிட் வார்னர் கொடுத்த திடீர் ட்விஸ்ட்.. ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட பிரஷர்.. மாறும் கள நிலவரம்
அணி நிர்வாகம் எங்கு நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அங்கு நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். பேட்டிங்கில் தொடக்க இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஏனென்றால் பெரும்பாலும் புதிய பந்தில்தான் விளையாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.