டேவிட் வார்னர் கொடுத்த திடீர் ட்விஸ்ட்.. ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட பிரஷர்.. மாறும் கள நிலவரம்

0
5914
Warner

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்காலத்தில் நட்சத்திர வீரர்களில் ஒருவராக டேவிட் வார்னர் இருக்கிறார். இவருக்கு நடந்து முடிந்த டி20 உலக கோப்பைத் தொடர் சர்வதேச கிரிக்கெட் அளவில் கடைசி தொடர் என்று அவர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் டேவிட் வார்னர் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் சிறப்பு வாய்ந்த ஒருவர். உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலே ஆஸ்திரேலியா தேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஒரே வீரர். அவர் மற்ற இரண்டு வடிவங்களில் விளையாடியதை பார்த்து அவரது திறமையைக் கணித்து வாய்ப்பு கொடுத்தார்கள். இப்படியான ஒரு சலுகையை இதுவரையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யாருக்கும் கொடுத்தது கிடையாது.

- Advertisement -

இந்த நிலையில் ஓய்வு பெற்றதாக அறிவித்திருந்த டேவிட் வார்னர் இன்று அது குறித்து தன்னுடைய அறிக்கையில் “அத்தியாயம் முடிவுக்கு வந்தது.நீண்டகாலமாக பெரிய மட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத ஒன்று. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பெரும் பகுதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தது. எல்லா வடிவத்திலும் நூறுக்கும் மேற்பட்ட போட்டிகள் விளையாடி இருக்கிறேன்.

இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நான் நன்றிகள் சொல்கிறேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் ஊழியர்கள் என எல்லோருக்கும் என்னுடைய நன்றி. மேலும் ரசிகர்களை குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மகிழ்வித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ரசிகர்கள் இல்லாமல் இதையெல்லாம் சாதிக்க முடியாது.

- Advertisement -

நான் சிலகாலம் டி 20 லீக்குகளில் விளையாடுவேன். அதே சமயத்தில் அடுத்த ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என்னை தேர்வு செய்தால் நான் விளையாட தயாராக இருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணத்தில் இருந்த எல்லோருக்கும் நன்றி” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பிசிசிஐ சினிமா மாதிரி அத பண்ணுது.. நாங்க பாகிஸ்தான் அந்த விஷயத்துல வேஸ்ட் – ரஷீத் லத்தீப் பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கிறது. அங்கு ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங் செய்ய சாதகமானது. மேலும் இந்த வடிவத்தில் இந்திய அணிக்கு பெரிய சவால் கொடுக்கக் கூடியது ஆஸ்திரேலியாவாகத்தான் இருக்கிறது. ரோகித் சர்மா இன்னும் சில ஐசிசி தொடர்களை கேப்டன் ஆக வெல்ல விரும்புகிறார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சிறந்து விளங்கும் டேவிட் வார்னர் மீண்டும் விளையாட தயாராக இருப்பது மறைமுகமான ஒரு அழுத்தமாக இந்திய அணி பக்கம் இருக்கும். அதே சமயத்தில் இந்திய அணி எதையும் சமாளிக்கும் அணியாகவே தெரிகிறது!

- Advertisement -