பேட்டிங்ல டிம் டேவிட் என்கிட்ட இத சொன்னார்.. என் பவருக்கான காரணம் இந்தியர்கள் மாதிரிதான் – ரொமாரியோ ஷெப்பர்ட் பேச்சு

0
305
Romario

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் முதலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரொமரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்றைய போட்டியில் பேட்டிங்கில் கடைசியில் 10 பந்துகளில் அதிரடியாக மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் குவித்தார். மேலும் பந்துவீச்சில் டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை வாங்கியது. பிறகு இவர் அங்கிருந்து லக்னோ அணிக்கு சென்றார். லக்னோ அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு டிரேடிங் செய்தது. அதிர்ஷ்டவசமாக பொல்லார்ட் இடத்தை நிரப்பக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் ரொமாரியோ ஷெப்பர்ட் தனி ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார். மேலும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் 234 ரன்கள் நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் ரொமாரியோ செப்ப்பர்டு மொத்தம் 32 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அசாதாரணமான பேட்டிங் இல்லையென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது போட்டியிலும் தோல்வி அடைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இதையும் படிங்க : மேட்ச் ரோமாரியாவுக்கும் டெல்லிக்கும்தான்.. நான் பவுலிங் பண்ணாததுக்கு காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும் பொழுது “நான் இப்படி விளையாடுவதற்கு நிறைய கடினமாக உழைத்து இருக்கிறேன். என் கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்திருக்கிறது. டிம் டேவிட் என்னை ஸ்ட்ரைக்கில் இருந்தால் அடிக்கச் சொல்லி கூறினார். நான் பந்தை பயன்படுத்தி விளையாடக்கூடிய நிலையில் இருந்தேன். மேலும் நான் பேட்டில் மற்றும் பந்துவீச்சு என ஒரு பக்கமாக சாய்ந்து கொள்ள விரும்பவில்லை. இரண்டிலுமே சரிக்கு சரி செயல்பட விரும்புகிறேன். மேலும் என்னுடைய பவருக்கு காரணம் நிறைய உணவு எடுத்துக் கொள்வதாக இருக்கலாம் இந்தியர்களைப் போலவே” என்று கூறியிருக்கிறார்.