4,6,6,6,4,6.. 13 பந்தில் 53 ரன்.. 390 ஸ்ட்ரைக் ரேட்.. ரொமாரியோ ஷெப்பர்ட் ஐபிஎல் வரலாற்றில் தனி சாதனை

0
800
Shepherd

நடப்பு 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா பரிதாபமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். அதே சமயத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியில் மிரட்டி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி இருவரும் இடம் பெற்றார்கள். மேலும் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடருக்கு திரும்ப வந்திருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் இடம்பெற்று இருக்கிறான்.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பகல் போட்டியில் ஆச்சரியப்படுத்தும் விதமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா பேட்டிங்கில் சிக்ஸர்கள் பறந்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு ஏழு ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்த பொழுது பிரிந்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 27 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இத்தோடு ஐபிஎல் தொடரில் மூன்று முறை 49 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். மேலும் இவரை ஐபிஎல் தொடரில் 49 ரன்களில் அதிக முறை ஆட்டம் இழந்தவர் என்கின்ற சோகமான சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். வார்னர், கெயில், மெக்கலம், சஞ்சு சாம்சன், கிரிஸ் லின் ஆகியோர் இரண்டு முறை ஐபிஎல் தொடரில் 49 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.

மும்பை அணியில் மீண்டும் திரும்பிய சூரியகுமார் யாதவ் 2 பந்துகள் சந்தித்து ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். இஷான் கிஷான் 23 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஐந்து பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி 32 பந்துகளில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஹர்திக் பாண்டியா பொறுமையாக விளையாடி 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து டிம் டேவிட் உடன் ரொமாரியோ ஷெப்பர்ட் சேர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை நொறுக்கி தள்ளிவிட்டார். அன்றிச் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் 4,6,6,6,4,6 என மொத்தம் 32 ரன்கள் அடித்து, 10 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 21 பந்தில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 45 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி வெறும் 13 பந்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 234 ரன்கள் குவித்து இருக்கிறது.

இதையும் படிங்க : கோலி 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருக்கலாம்.. இவ்வளவு காசு கொடுத்து எடுத்து வீண் – சேவாக் பேச்சு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவரில் அதிக ரன் அடித்தவராக ரொமாரியோ ஷெப்பர்ட் சாதனை படைத்திருக்கிறார். மேலும் 10 பந்துகள் மேல் விளையாடி 30 ரன்கள் மேல் எடுத்ததில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஐபிஎல் வரலாற்றில் 390 ஸ்ட்ரைக் ரேட்டில் சாதனை படைத்திருக்கிறார்.