“ரோகித் தன்னைவிட இந்த 29 வயது வீரரைதான் அதிக நம்பறார்.. அவர் இல்லனா இவர் இல்ல!” – அபினவ் முகுந்த் அதிரடி கருத்து!

0
9256
Rohit

இந்திய அணி முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் சந்திக்க இருக்கிறது!

ரோகித் சர்மாவுக்கு இது மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராகும். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் மொத்தம் ஐந்து சதங்கள் அடித்து பிரம்மாண்ட உலக சாதனையை படைத்திருக்கிறார்.

அவர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் கேப்டனாக எதிர் கொண்ட முதல் உலகக்கோப்பை தொடர் அவருக்கு மிகப்பெரிய சோதனையாகவே அமைந்திருந்தது. அந்தத் தொடரில் அவருடைய திட்டங்களில் இருந்த இரண்டு முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.

அந்த இரண்டு முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்திலிருந்து திரும்ப அணிக்கு மீண்டும் வந்திருக்கிறார்கள். இது ரோஹித் சர்மாவை மிகவும் பலப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநவ் முகுந்த் கூறும் பொழுது “ரோகித் சர்மா தான் திரும்பி வந்ததை விட, பும்ரா காயத்திலிருந்து மிகச் சிறப்பாக திரும்பி வந்ததில்தான் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவருடன் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற பிறகு, அவருக்கு அவர் குறித்து ஒரு தன்னம்பிக்கை உணர்வு இருக்கிறது. அவர் ஒரு விக்கெட்டை பெற விரும்பும் போது நேராக பும்ரா இடம் செல்கிறார். ஐபிஎல் தொடரிலும் இதே நிலைதான் இருந்தது.

நீங்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பார்த்தால் பும்ரா தற்பொழுது இறுதி கட்ட ஓவர்களில் சோதிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் பவர் பேக் மிடில் ஆர்டர் விளையாடும் பொழுது பும்ரா உடைய ஓவர்கள் கொண்டு வந்து பரிசோதிக்கப்படும். அவரும் இம்மாதிரியான அமைதியான ஆடுகளங்களில் பந்து வீச விரும்புவார்!” என்று கூறியிருக்கிறார்!

நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானமாகத்தான் பொதுவாகக் கருதப்படுகிறது!