இந்திய கிரிக்கெட்

ரோகித்தை தொடர்ந்து குறி வைக்கும் கம்பீர் அகர்கர்.. ரிஷப் பண்ட்டே சாட்சி.. என்ன நடக்கிறது? – முழுமையான அலசல்

தற்போது இந்திய ஒரு நாள் அணியில் விராட் கோலியின் இடம் உறுதி ஆகிவிட்டதாகவும், ரோகித் சர்மாவின் இடம் உறுதி ஆகவில்லை எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருவதாகவே தெரிகிறது. அதே சமயத்தில் விராட் கோலி கட்டாயம் விளையாடுவார் என்றும் தெரிய வருகிறது.

கம்பீர் அகர்கர் விளையாட்டு

கம்பீர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த உடனேயே 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்பது குறித்தான கேள்விக்கு, அவர்களின் உடல் தகுதி மற்றும் பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன்பாக பேசியிருந்த அகர்கர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ரன்கள் எடுத்தால் அதை வைத்து தேர்வு செய்ய மாட்டோம், ரன்கள் எடுக்கவில்லை என்றால் அதை வைத்து நீக்கவும் மாட்டோம், ஏனென்றால் இன்னும் இரண்டு வருடங்கள் உலக கோப்பைக்கு இருக்கிறது என உறுதிப்படாமல் பேசி இருந்தார்.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு செக்

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு ரோகித் சர்மாவுக்கு செக் வைக்கப்பட்டிருப்பதாக காட்டுகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ருத்ராஜுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க :தயவு செஞ்சு இந்த வீரரை மட்டும் இழுத்து பிடிங்க.. பாண்டியாவுக்கு காட்டுன பொறுமைய இவர்கிட்ட காட்டுங்க – இர்பான் பதான் வேண்டுகோள்

மேலும் ருத்ராஜை அணியில் சேர்க்காமல் இருப்பதற்காக நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் விராட் கோலிக்கு மாற்றுவீரரை அவர்கள் தேடவில்லை என்று தெரிவித்து விட்டார்கள். அதேசமயத்தில் மாற்று துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்து இருக்கிறார்கள். இதன்மூலம் ரோகித் சர்மாவை பிரஷரில் வைப்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது. நியூசிலாந்து தொடரில் ருத்ராஜ் இடத்தில் ரிஷப் பண்டை இதனால்தான் விளையாட வைக்க போகிறார்கள். ரோகித் சர்மாவுக்கு இந்த அழுத்தத்தை கொடுப்பது தவறானது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -
Published by