தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுத்து அவரிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இர்பான் பதான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை முதல் விளையாட இருக்கிறது. இதைத்தொடர்ந்து அதே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது.
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவருக்கும் சரியான மாற்று வீரர்கள் கிடையாது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடர் இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர்களை தேர்வு செய்யவில்லை. இவர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் ஹர்திக் பாண்டியா இடத்தில் இவர் தேர்வு செய்யப்பட்டு, ஆனால் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் வெளியில் இருந்தார். இப்படி வெளியில் இருப்பதற்கு அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும் என பல கேள்விகள் வந்தது.
அதிக வாய்ப்புகள் கொடுங்கள்
இது குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” நிதீஷ் குமார் ரெட்டி சரியாக விளையாட விட்டாலும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் பெரிய அளவில் கிடையாது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாடிய காரணத்தினால் தான் தற்போது இருக்கும் நிலைக்கு வந்தார். எனவே அவரிடம் காட்டிய பொறுமையை இவரிடமும் காட்ட வேண்டும்”
இதையும் படிங்க : என்ன டீமை விட்டு நீக்கீடுவாங்கற பயம் போனது அப்பதான்.. ஜடேஜா பாய்க்கு நான் போட்டியா? – அக்ச்ர் படேல் பேட்டி
“நாம் அவரிடம் பொறுமையை காட்டவில்லை என்றால் நம்மால் சரியான திருப்புமுனையை பார்க்க முடியாது. அவர் ஆஸ்திரேலியாவில் அடித்த டெஸ்ட் சதத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்த வடிவ கிரிக்கெட்டிலும் செயல்படவில்லை. இருந்த போதிலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து, நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






