இந்திய கிரிக்கெட்

உகோ முன்பு.. சாம்சனுக்கு ரோகித் சர்மா சொன்ன வார்த்தைகள்.. அப்படியே நடந்த ஆச்சரியம்.. வெளியான புதிய செய்திகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பாக சஞ்சு சாம்சனுக்கு கூறிய மோட்டிவேஷன் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக வந்து இறுதி வரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் அருமையான இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்தார்.

சாம்சன் பேச்சு

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு அம்பாசிடராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேரில் அவர் டி20 உலகக் கோப்பை தொடக்க நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் இந்திய அணி வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

மேலும் நேற்று போட்டிக்குப் பிறகு பேசி இருந்த சஞ்சு சாம்சன் தான் இந்திய அணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் குறைவாகன போட்டிகளில் விளையாடி இருந்தாலும், வெளியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவதை பார்த்து கற்றுக் கொண்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஹித் சர்மா மோட்டிவேஷன்

இந்த டி20 உலக கோப்பை தொடரின்போது இந்திய பிளேயிங் லெவலில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் இருவர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த ஒரு ஆண்டாக தயாராகி இருந்த சஞ்சு சாம்சனுக்கு இதை ஏமாற்றத்தை கொடுத்தது.

இதையும் படிங்க : நேத்து சஞ்சு சாம்சன் சக்சஸ்க்கு இதுதான் முக்கிய காரணம்.. இத மட்டும் விடாதீங்க – ரவி சாஸ்திரி பாராட்டு

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் சஞ்சு சாம்சன் இடம் பேசிய ரோஹித் சர்மா “சஞ்சு சோர்ந்து போகாதீர்கள். இது ஒரு பெரிய டோர்னமெண்ட். நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியே வாய்ப்பு கிடைத்தவுடன் அதில் சஞ்சு சாம்சன் சாதித்தும் காட்டி இருக்கிறார்.

- Advertisement -
Published by