நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அவரது பேட்டிங் சிறப்பாக இருந்ததற்கான காரணம் குறித்து முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இறுதி வரை களத்தில் நின்று 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இதுவரையிலான அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக அமைந்திருக்கிறது.
சாம்சன் மாற்றம்
நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதல் இறுதி வரையில் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அரை சதம் அடித்தபோது மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடித்த போது என எங்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது இந்த நிதானம் மற்றும் அமைதி நேற்றைய போட்டியில் வித்தியாசமாக அமைந்தது.
மேலும் அவர் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்று தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால். இதன் காரணமாக ஒரு பந்தை பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு அடித்தாலும் கூட அடுத்து உடனே சிங்கிள் எடுத்து, ஒவ்வொரு ஓவராக போட்டியை அணுகினார். இது அவரது வழக்கத்திற்கு மாறான பேட்டிங் பாணியாக அமைந்தது.
ரவி சாஸ்திரி பாராட்டு
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “சஞ்சுவின் நேற்றைய இன்னிங்ஸ் சிறப்பு என்னவென்றால் அது அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் சிறப்பான இன்னிங்ஸ். இந்த போட்டி முழுவதுமே அவரது நிதானம், கடைசிவரையில் காட்டிய அமைதி மேலும் அவரது கம்பீரமான டச் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது”
இதையும் படிங்க : ஹெட்மயர் அவுட் இல்லை.. அந்த விஷயத்துல ஏமாத்திதான் இந்தியா ஜெயிச்சுட்டாங்க – முகமது அமீர் சர்ச்சை பேச்சு
“சஞ்சு உங்களிடம் எல்லாமே இருந்தது. உங்களுக்கு டைம் இருந்தது, உங்களுக்கு அதிரடியாக ஆடும் வெடிக்கும் சக்தி இருந்தது. கையை சுழற்றி விளையாட இடம் இருந்தது, கிளாஸ் இருந்தது. இப்படி எல்லாமே இருந்தது. இதில் முக்கியமானது என்னவென்றால் அவரைச் சுற்றி விக்கெட் விழும்போது அவர் தனது நிதானத்தையும் அமைதியையும் விடவில்லை. இது எப்பொழுதும் தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






