இந்திய கிரிக்கெட்

2024 டி20 உலக கோப்பை சிறந்த இன்னிங்ஸ்.. கோலி கிடையாது.. இவருடையதுதான் – ஆர்சிபி முன்னாள் கோச் பேட்டி

இந்த வருடம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. என்ன நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்த உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ் எதுவென தன்னுடைய கணிப்பை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான ஆடுகளங்கள் அனைத்துமே மெதுவான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவையாக இருந்தன. இதனால் சுழல் பந்துவீச்சாளர்கள் நல்ல ஆதிக்கம் செலுத்தினார்கள். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களும் வேரியேஷன்களை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இதன் காரணமாக பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளிலுமே காணப்பட்டது. இருந்த போதிலும் சில பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலையிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்திய அணியை பொருத்தவரையில் விராட் கோலி முதல் ஆட்டத்தில் ஆரம்பித்து அரைஇறுதி வரையில் ஒரு போட்டியில் கூட நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அதே சமயத்தில் இறுதிப் போட்டியில் விராட் கோலி மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் அடித்து அணி வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக யாரும் எதிர்பார்க்காத வகையில் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். பவர் ப்ளேவில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் உடன் 29 ரன்கள் நொறுக்கி தள்ளினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் மிட்சல் ஸ்டார்க் தந்த அதிகபட்ச ரன்கள் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பணம் பிரச்சனை இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டை வீரர்கள் ஒதுக்க இது மட்டும்தான் காரணம் – ஆண்ட்ரே ரசல் பேட்டி

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் விராட் கோலியின் இன்னிங்ஸை ஒதுக்கிவிட்டு ரோகித் சர்மாவின் இன்னிங்ஸை 2024 டி20 உலக கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ் என குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்த இன்னிங்ஸ் தான் 2024 டி20 உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by