பணம் பிரச்சனை இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டை வீரர்கள் ஒதுக்க இது மட்டும்தான் காரணம் – ஆண்ட்ரே ரசல் பேட்டி

0
135

வெஸ்ட் இண்டீஸ் சிறந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் தொடர் மற்றும் இன்றி உலகில் நடைபெறும் அனைத்து வகையான பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் தொடரிலும் பங்கு பெற்று விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறி அதற்கான காரணத்தையும் ரசல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வருகைக்கு முன்னர் கிரிக்கெட்டை பொருத்தவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை மக்களிடையே ஆர்வத்தை அதிகரிக்க டி20 போட்டித் தொடர்கள் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கால்பந்து போட்டிகளில் உள்ள பிரான்சிஸ் லீக் தொடர்கள் போல கிரிக்கெட்டிலும் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

அதற்குப் பிறகு டி10, 100 பந்துகள் கொண்ட போட்டி தொடர் என்று உலகம் முழுவதும் பல்வேறு வகையான பிரான்சிஸ் கிரிக்கெட் லீக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த இளம் தலைமுறை வீரர்கள் பணத்திற்காக அல்லாமல் டி20 போட்டிகளில் விளையாடுவதை ஆர்வமாகக் கொண்டிருக்கின்றனர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் ரசல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரசல் விரிவாக கூறும்போது “இது பணத்திற்காக இருக்காது என்று நினைக்கிறேன். மேலும் பணம் ஒரு காரணியாக இருக்காது. டி20 தொடர்கள் மற்றும் உலகெங்கிலும் நடைபெறும் லீக் தொடர்களால் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று நான் நினைக்கிறேன். சொந்த நாட்டிற்கு வெளியே உள்ள ஒப்பந்தங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படும் போது அவர்களுக்கான வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

ஆனால் எல்லோரும் பெரிய மேடைகளில் விளையாடவே விரும்புவார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதுபோல பெரிய மேடைகள் வரும்போது இளைஞர்கள் மகிழ்ச்சியோடு அதில் விளையாடுவார்கள். அதனால் இது பணத்திற்காகவோ அல்லது வேறு எந்த காரணிகளுக்காகவோ டெஸ்ட் கிரிக்கெட்டில் இளைஞர்கள் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை என்று நான் நினைக்கவில்லை” என ரசல் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:அர்ஷ்தீப் மயங்க் யாதவ் இல்ல.. ஆஸிக்கு இந்த இடதுகை ஃபாஸ்ட் பவுலர்தான் வரனும் – ரிக்கி பாண்டிங் விருப்பம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சுனில் நரேன், ரசல், பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன் இன்னும் பல வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை விட அதிகமாக டி20 பிரான்சிஸ் லீக்குகளிலேயே விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கப்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் சில வீரர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -