ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை காப்பற்றியதே அந்த ஒரு முடிவு தான் – பாராட்டிய ஜாம்பவான்

0
827

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சாதனை நாயகனாக விளங்கி வருபவர் ரோகித் சர்மா. ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் ,டி20 கிரிக்கெட்டில் சதம் ,டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என கலக்கி வரும் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு முன்பு இந்திய அணியில் விளையாடி உலக கோப்பையை வென்றவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

- Advertisement -

உலக கோப்பையை வென்ற ஒரு வீரர் அடுத்த உலக கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்டு இனி இந்திய அணியில் இடமே கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது ஒரே ஒரு முடிவுதான். இது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயன் செப்பல் பேட்டிங்கிற்கு நெருக்கடியான ஆடுகளத்தில் ரோஹித் சர்மா விளையாடிய ஆட்டம் போற்றுதலுக்குரியது. ஒரு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ்.

அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தன்னம்பிக்கையுடன் விளையாடி அசத்தினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் பல்வேறு சாட்டுகளை ரோகித் சர்மா ஆடினார்.சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய வீரர்களை வெறுப்பேற்றினார். அவர் எந்த பந்தை அடிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் அடித்தார்.மற்ற நேரத்தில் பொறுமை காத்தார். இந்திய ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என மற்ற நாட்டு வீரர்களுக்கு ரோகித் சர்மா பாடம் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எப்போது தொடக்க வீரராக களம் இறங்கினாரோ அது அவருடைய டெஸ்ட் கேரியரை காப்பாற்றியது. இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா நடுவரிசையில் விளையாடி இருந்தால்  அது அனைத்தும் வீணாக போயிருக்கும் என்று இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் 3257 அடித்து இருக்கிறார். இதில் ஒன்பது சதங்களும் 14 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -