ஹர்திக் பாண்டியா விரும்பின ஒன்னு நடந்திருக்கு.. இனியும் அது அப்படியே தொடரும் – ரோகித் சர்மா பேச்சு

0
1804
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன் அணியில் எல்லா வீரர்களும் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்கள். இதுகுறித்து ரோஹித் சர்மா மும்பை அணிக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வெல்ல முடியாமல் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 47, இஷான் கிஷான் 42, டிம் டேவிட் 41, ஹர்திக் பாண்டியா 39, ரொமாரியோ செப்பர்டு 39 ரன்கள் எடுத்தார்கள். ஒருவர் கூட அரை சதம் அடிக்காமல் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியும் விட்டுக் கொடுக்காமல் போராடி 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் அதிரடியாக 71 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்சி நான்கு விக்கெட் கைப்பற்றிய போதும், பும்ரா முக்கியமான நேரத்தில் வந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்ததோடு, நான்கு ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இது இலக்கை நோக்கி சென்ற டெல்லி அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி தோல்விக்கு அழைத்துச் சென்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த அணிக்கும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் எதிராக மைதானத்தில் சொந்த அணிகளின் ரசிகர்களே கூச்சலிட்டனர். இந்த நிலையில் மூன்று போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அணிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா “இது ஒரு அற்புதமான பேட்டிங் செய்து தரேன். முதல் போட்டியில் இருந்து நாம் இதற்காகத்தான் உழைத்து வருகிறோம். மொத்த அணியும் எழுந்து நின்று சிறப்பாக செயல்பட்டு தனிநபர் செயல்பாடு முக்கியமில்லை என்பதை காட்டுகிறது. இதன் மூலம் அணியாகச் சேர்ந்து உழைத்தால் இலக்கை அடையவும் முடியும் வெற்றி பெறவும் முடியும் என்பதை உணர்த்துகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி மாதிரி ஒருத்தர் இனி வர முடியாது.. அவர்கிட்ட நான் பயப்பட்ட விஷயம் இதுதான் – கம்பீர் மனம் திறந்த பேட்டி

இது நாம் நீண்ட காலமாக பேசிக் கொண்டிருந்த விஷயம். பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு, பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விரும்பக்கூடிய ஒன்று இது. இது பார்க்க அருமையாக இருக்கிறது மேலும் இது தொடரும்” எனக் கூறியிருக்கிறார்.