இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய அணி சிறப்பான வெற்றி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்த பாபர் அசாம் எதிர்பாராத விதமாக 23 ரன் எடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து விளையாடவில்லை. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த போதிலும் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறினார்கள்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 241 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தின் மூலமாக 43 ஓவர்கள் முடிவதற்குள் 244 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதில் இந்திய அணியின் விராட் கோலி சிறப்பாக விளையாடி 111 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரியுடன் 100 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டி குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
விராட் கோலியின் ஆசை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நாங்கள் எங்களது இன்னிங்ஸை ஆரம்பித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. வெளிச்சத்தில் பேட்டிங் செய்வது சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்களது அனுபவத்தின் மூலமாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம். அக்சார், குல்தீப் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு தான் இந்த ஆட்டத்தின் பெருமை சேரும். பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் ஷகீல் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது.
இதையும் படிங்க:கடைசி பந்தில் 4 ரன்.. கம்பேக் கொடுத்த விராட் கோலி.. 6 விக்கெட்டில் இந்தியா பாக் அணியை வீழ்த்தி வெற்றி.. முழு விபரம்
ஆட்டம் கைநழுவி போகாமல் பார்த்துக் கொள்ளக் கூடியது மிகவும் அவசியமாகும். மேலும் ஹர்திக் பாண்டியா, சமி மற்றும் ஹர்சித்ரானா பந்து வீசிய விதத்தையும் மறக்கக்கூடாது. இந்த வடிவ கிரிக்கெட்டை பொருத்தவரை நாங்கள் அனைவரும் இணைந்து பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். அக்சார் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலியை பொருத்தவரை அவர் நாட்டை பெருமைப்படுத்த விரும்புகிறார். அவர் தனித்து நின்று செயல்பட விரும்புகிறார். அவருடன் நான் இணைந்து இதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். எனக்கு ஏற்பட்ட சிறு காயம் இப்போது பரவாயில்லை” என்று பேசி இருக்கிறார்.