கடைசி பந்தில் 4 ரன்.. கம்பேக் கொடுத்த விராட் கோலி.. 6 விக்கெட்டில் இந்தியா பாக் அணியை வீழ்த்தி வெற்றி.. முழு விபரம்

0
969

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைந்தாலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினார்கள். அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 26 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் தடைபட்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் சகீல் 62 ரன் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்கள் குவித்தனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 9 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவருக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் அக்சார் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

- Advertisement -

விராட் கோலி அபார ஆட்டம்

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் களம் இறங்க, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவர்களில் 31 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு ரோகித் சர்மா 20 ரன்னில் வெளியேற, விராட் கோலி களம் இறங்கி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார். இதற்கு இடையில் கில் 46 ரன்னில் வெளியேற, நான்காவது வரிசையில் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் விராட் கோலி உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 67 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:14000 ரன்.. உலகின் முதல் வீரராக கோலி சாதனை.. சச்சின் ரெக்கார்டு முறியடிப்பு.. சாம்பியன்ஸ் டிராபி.. முழு விபரம்

இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து மேலும் தனது இன்னிங்ஸை வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தார். விராட் கோலி 96 ரன்களில் இருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, பௌண்டரி அடித்து அபாரமான சதத்தையும், இந்திய அணியின் வெற்றியும் விராட் கோலி உறுதி செய்தார். 111 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 7 பௌண்டரியுடன் 100 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலமாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 82 ஆவது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -