நேற்று நடப்பு ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். தொடர்ந்து அவர் அடுத்த வருடம் ஐபிஎல் விளையாடக்கூடாது என்றும் பேசப்பட்டது. இப்படியான நிலையில் நேற்று 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் ஆரம்பத்தில் அவருக்கு இரண்டு எளிய கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டது.
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா கூறும் பொழுது “நான் இந்த சீசனில் மொத்தம் நான்கு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறேன். எனக்கு இன்னும் நிறைய அரை சதங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக எங்களுக்கு இன்று நல்ல நாள். எலிமினேட்டர் சுற்றில் விளையாடி வென்று அடுத்த சுற்று போவது நல்ல உணர்வாக இருக்கிறது. இதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாக புரிகிறது. ஒரு அணியாக சேர்ந்து வென்றதில் உண்மையில் நான் பெருமைப்படுகிறேன்”
“நான் விளையாட்டை விளையாடும் பொழுது நடந்த எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு விளையாடவே விரும்புகிறேன். அணிக்காக என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இன்று எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. அதே பனிப்பொழிவு வரும் பொழுது பந்துவீச்சாளர்களுக்கு நிலைமை கடினமாக மாறிவிட்டது. அவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க வேண்டிய சூழலுக்கு வந்தார்கள்”
“இன்று ஆடியது போலவே சில ஷார்ட் ஆடி பீல்டர்கள் கையில் கொடுத்திருக்கிறேன். இந்த போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருந்தது. அவர்கள் நான் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதில் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். இன்று என்னுடைய நாளாக அமைந்து விட்டது”
இதையும் படிங்க : 409/3.. கருண் நாயர் நாட் அவுட் மெகா சதம்.. ஜூரல் சர்பராஸ் அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்து லயன்ஸ் தடுமாற்றம்.. இந்தியா ஏ ரன் குவிப்பு
“அவர்கள் உங்களுக்கு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டாலும் கூட நீங்கள் தொடர்ந்து வேகத்தை எடுத்துச் சொல்வது தான் முக்கியமானது. நான் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி வேகத்தை அடுத்து எடுத்துச் செல்வதற்கு முயற்சி செய்து விளையாடினேன். மேலும் இத்தனை நாள் நான் ஜானியை எதிர்ப்புறத்தில் வைத்து பார்த்திருக்கிறேன். அவருடைய தரம் என்னவென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இன்று அவர் முதல் போட்டியில் விளையாட இது போலவே தெரியவில்லை. அவர் இந்த வடிவ கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் உடையவர்” என்று கூறி இருக்கிறார்.