“அவர் அடக்கமா இருப்பார்னு நம்பறேன்.. 3 போட்டி இருக்கு பாத்துக்கலாம்” – ரோகித் சர்மா பேச்சு

0
892
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு நிறைய அழுத்தங்கள் இருந்து வருகிறது.

முதல் போட்டிக்கு அணியின் முதுகெலும்பான விராட் கோலி இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. மேலும் அவர் மூன்றாவது போட்டிக்குதான் அணிக்கு திரும்புகிறார்.

- Advertisement -

இதற்கடுத்து முதல் போட்டியில் விளையாடிய அனுபவ வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால் விலகி இருக்கிறார்கள். இத்தோடு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமியும் காயத்தால் இடம் பெறவில்லை.

இதனால் இளம் வீரர்கள் கொண்ட அணியை வைத்து, சமீப காலத்தில் மிகவும் அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் முதல் போட்டியை தோற்க இன்னும் அழுத்தம் அதிகரித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் மீண்டு வந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் இளம் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “பும்ரா எங்களுக்கு சாம்பியன் வீரர். இப்படி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறும் பொழுது எல்லோருடைய மொத்த செயல் திறனையும் பார்க்க வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் நன்றாக இருந்தோம். இந்த நிலையில் டெஸ்டில் வெற்றி பெறுவது எளிதான காரியம் கிடையாது. எனவே எங்கள் பந்துவீச்சாளர்கள் முன்னேறி செல்ல விரும்பினார்கள். அவர்கள் அதைச் செய்தும் இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் மிகவும் நல்ல வீரராக தெரிகிறார். அவர் ஆட்டத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து இருக்கிறார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எனவே அவர் அடக்கமாக இருப்பார் என்று நம்புகிறேன்.

விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. ஒரு விஷயத்தை சுட்டி காட்ட வேண்டும் என்றால் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கும் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் புதிதாக வந்திருக்கிறார்கள் என்பதால் நான் இதை புரிந்து கொள்கிறேன்.

இளம் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற ஒரு இளம் அணியோடு இருந்து வெற்றி பெறுவது பெருமையாக இருக்கிறது. இவர்கள் சரியாவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும். அவர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : “துரதிஷ்டவசமா தோத்துட்டோம்.. இந்த இந்திய வீரருக்கு தலை வணங்குகிறோம்” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தத் தொடர் எளிதாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் மீதி 3 போட்டிகளுக்கு எல்லா விஷயங்களையும் சரியாக செய்வோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.