தெரியாம கேட்கிறேன்.. பயிற்சி ஆட்டம் ஏன் ஆடல.?.. ரோகித் சர்மா சொன்ன வித்தியாசமான காரணம்.!

0
373

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரெண்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிக மோசமாக அமைந்துள்ளது.

செஞ்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாபிரிக்க அணி 408 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி 185 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறி கொடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் கனவு இந்திய அணிக்கு இந்த முறையும் தகர்ந்து போனது.

தொடரை இழக்காமல் இருக்க அடுத்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. 1992ம் ஆண்டு முதல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு டெஸ்ட் தொடரை டிரா செய்துள்ளது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா தோல்விக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது

- Advertisement -

“நாங்கள் கடந்த 4 முதல் 5 வருடங்களாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறோம். பயிற்சி ஆட்டத்தின் போது விளையாடும் ஆடுகளம், போட்டியின் போது விளையாடும் ஆடுகளத்தை விட வித்தியாசமானது. நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாடிய போதும், 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போதும் விளையாடிய பயிற்சி ஆடுகளங்களில் பந்து முழங்காலுக்கு மேல் எகிறவில்லை.

ஆனால் இந்த போட்டியில் பந்து தலைக்கு மேலே எகிர்கிறது. பயிற்சிப் போட்டியின் போது வீசும் பந்துவீச்சாளர்கள் மணிக்கு 120-125 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார்கள். இது தொடரில் நாங்கள் எதிர்கொள்ளும் பந்துகளை விட வித்தியாசமானது. எனவே எங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆடுகளத்தை அமைத்து, எங்கள் சொந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது நன்றாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

- Advertisement -