கோலியை அவமானப்படுத்திய டிராவிட், ரோகித்! மும்பை வீரர் என்பதால் இஷானுக்கு இந்த கவனிப்பு?

0
390

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவும் விராட் கோலியை அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆடுகளம் சிமெண்ட் தரை போல் இருப்பதால் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. எனினும் இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பாய் போட்டு படுத்து தூங்கி விட்டார்கள்.

- Advertisement -

115.4 ஓவரை எதிர்கொண்டு 255 ரன்கள் தான் அடுத்தார்கள். நான்காம் நாள் ஆட்டமான இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி கடுப்பேற்றிய நிலையில் முகமது சிராஜ் தன்னுடைய பந்துவீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

  இந்த நிலையில் 183 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. இதில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டஸ்க்கு பெரிய இலக்கை விரைவில் நிர்ணியிக்க வேண்டும் என்று களம் இறங்கினர். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த ஏதுவாக இருக்கும் என ரோகித் சர்மா முடிவு எடுத்தார்.

அதன்படி ரோகித் சரமாவும், ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரோகித் சர்மா, 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார். நான்கு பவுண்டரிகளும் மூன்று சிக்சரும் இதில் அடங்கும். ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழக்க, கில் உடன் விராட் கோலி களமிறங்கி அதிரடியாக விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் விராட் கோலியை அவமானப்படுத்தும் விதமாக அந்த இடத்தில் இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் கடுப்பான கோலி ரசிகர்கள் ஏன் விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட தெரியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரோகித் போல் விராட் கோலிக்கும் அதிரடியாக ஆட தெரியும் என்ற நிலையில் கோலி, ரகானேவை முந்தி இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்குவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால் இஷான் கிஷனுக்கு தனி கவனிப்பா என்றும் பலர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.