“அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் எதிர்காலம் பற்றி மனம் திறந்த ரோகித் சர்மா” !

0
442

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தொடர் நாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த டெஸ்ட் போட்டி தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 26 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 21 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவரும் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் இந்தியா அணிக்கு பல நேரங்களில் கை கொடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தற்போது 36 வயதாகிறது. ரவீந்திர ஜடேஜாவிற்கு 34 வயதாகிறது. இவர்கள் இன்னும் எவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

- Advertisement -

ஆட்டத்திற்குப் பின்பு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மைதானங்களில் சிறப்பாக பந்துவீசி வருபவர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் . இந்திய அணியின் வெற்றிகளில் இவர்கள் இருவரது பங்கும் அளப்பரியாதது எனக் கூறினார். மேலும் அணியின் வெற்றிக்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருவது என்பது சாதாரணமான காரியம் அல்ல என்றும் தெரிவித்தார்.

அவர்கள் நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அவர்கள் இருவரது ஓய்வுக்கு பின்னும் மிகப்பெரிய வெற்றிடம் இந்திய அணியில் உருவாகும். அதனால் அவர்களால் எவ்வளவு நாள் விளையாட முடிகிறதோ அவ்வளவு நாளும் விளையாட வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். அவர்களது ஓய்விற்கு பின் அவர்கள் விட்டுச் செல்லும் இடம் மிகப்பெரிய இடம் . அதனை சாதாரணமாக யாராலும் நிரப்பி விட முடியாது. இந்தியா அணிக்காக அவர்கள் நீண்ட நாள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என நான் விரும்புவதாக தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய ஆடுகளங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு இவர்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தற்போது 36 வயதாகிறது. ரவீந்திர ஜடேஜாவிற்கு 34 வயதாகிறது. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கையில் ரோகித் சர்மா ” அவர்கள் முடிந்தவரை விளையாடுவார்கள் என்று மட்டுமே நான் நம்புகிறேன்.எனவே இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அவர்கள் தங்களால் இயன்ற வரை தொடருவார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார் .