கங்குலியின் மறக்க முடியாத 17 வருட சாதனை.. ரோகித் உடைக்க கோல்டன் வாய்ப்பு.. 3வது போட்டியில் நடக்குமா?

0
155
Ganguly

இந்திய கிரிக்கெட்டில் கேப்டனாக சவுரவ் கங்குலிக்கு எப்பொழுதும் தனியிடம் இருக்கிறது. ஏனென்றால் இன்றைய இந்திய கிரிக்கெட்டின் மாற்றத்திற்கான முதல் திருப்புமுனையை ஏற்படுத்திய கேப்டனாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு நாளை இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் பல சூப்பர் ஸ்டார் வீரர்களை அறிமுகப்படுத்தி ஆதரித்து வளர்த்த கேப்டனாக சவுரவ் கங்குலி இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் தான் சிறுநகரத்தில் இருந்து உருவாகின்ற வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.

- Advertisement -

இதன் தொடர்ச்சியாகத்தான் மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான் வீரர்கள் பின்தங்கிய மாநிலத்தில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்தார்கள். மேலும் பிற்காலத்தில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் வருவதற்கான வாய்ப்புகளை இதுவே உருவாக்கியது.

இந்த நிலையில் 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு சவுரவ் கங்குலி அடிக்கும் சிக்ஸர்கள் என்பது எப்பொழுதும் கண்களுக்கு பெரிய விருந்து படைக்க கூடியது. அவர் கிரீசை விட்டு இறங்கி விட்டார் என்றால் பந்து நிச்சயம் எல்லைக்கோட்டை தாண்டி விடும் ரசிகர்கள் மிக உறுதியாக நம்புவார்கள். அதுவும் அவர் எந்த அளவுக்கு இறங்கி வருகிறாரோ அவ்வளவு தூரம் பந்து பறக்கும் என்பது உறுதி.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டனாக சவுரவ் கங்குலி 147 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி மொத்தம் 115 சிக்ஸர்கள் கேப்டனாக அடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் 200 போட்டிகளில் தோனி 126 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

தற்போது 47 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து ரோகித் சர்மா 112 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். தற்போதைக்கு சவுரவ் கங்குலியை விட 100 போட்டிகள் குறைவாகவும் இருக்கிறார். நாளை இலங்கையணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கொண்டு நான்கு சிக்ஸர்கள் அடித்தால் சவுரவ் கங்குலி இந்திய கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை ரோகித் சர்மா தாண்டுவார்.

இதையும் படிங்க : கோலியை விட ரோகித்தான் சிறந்தவர்.. அவர் எங்க ஆள் மாதிரி.. காரணம் இதான் – பாக் சாதனை முன்னாள் வீரர் பேட்டி

சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2007 ஆம் ஆண்டு நகர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு கேப்டனாக வந்த மகேந்திர சிங் தோனி இதை முறியடித்திருந்தார். தற்பொழுது ரோகித் சர்மா இதை முறியடிக்கிறார். மேலும் ரோகித் சர்மா இன்னும் 15 சிக்ஸர்கள் அடித்தால் இந்திய கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கின்ற தனி சாதனையை தோனியை முந்தி படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -