இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் யூனிட்டில் தற்போது மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தூண்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்தவர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமத் ஷாகித் கூறியிருக்கிறார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால் விராட் கோலி தற்போது விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் அடித்தவராகவும், மேலும் இதுவரை விளையாடிய வீரர்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரராகவும் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.
அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் டி20 உலகக்கோப்பை வரலாற்றிலும், ஒட்டு மொத்தமாக டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி மற்றவர்கள் நெருங்க முடியாத சாதனைகளை செய்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலி மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் ஆனால் சிறந்தவராகவே செயல்பட்டு வந்திருக்கிறார்.
இந்த வகையில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் கழித்தே வாய்ப்பு கிடைத்தது. அதேபோல அவர் வெள்ளை பந்து வடிவத்தில் தன்னை நிரூபிப்பதற்கும் நிறைய ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகேந்திர சிங் தோனி ரோஹித் சர்மாவை துவக்க வீரராக கொண்டு வந்த பிறகுதான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே 10 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படைத்த முகமத் ஷாகித் விராட் கோலியை விட இந்திய கேப்டன் ரோகித் சர்மாதான் சிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாவுடன் தொடர்.. நான் அந்த ஒரு விஷயத்தை அவமானமா நினைக்கிறேன்.. அன்புக்கு நன்றி – ஜோஸ் பட்லர் வருத்தம்
இதுகுறித்து முகமத் ஷாகித் கூறும்பொழுது “விராட் கோலியை விட ரோஹித் சர்மாதான் சிறந்தவர். விராட் கோலி நல்ல கிளாஸ் பேட்ஸ்மேன் என்பது எனக்கு தெரியும். அவர் வித்தியாசமானவர் என்றும் எனக்கு தெரியும். ஆனால் அவரைவிட முன்பாக ரோஹித் சர்மாதான் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் தற்போது ரோகித் சர்மாதான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இன்சமாம் உல் ஹக் போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அச்சம் இல்லாமல் தைரியமாக விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.






