நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் 23 பந்துகளில் தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார். இதனால் அந்த அணிக்கு நெருக்கடி உண்டானது.
இந்த நேரத்தில் ரஜத் பட்டிதார் 26 பந்தில் 50 ரன்கள், பாப் டு பிளிசிஸ் 40 பந்தில் 61 ரன்கள் எடுத்து அணியை மீட்டுக் கொண்டு வந்தார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் பூம்ரா இடம் சிக்கிய ஆர்சிபி அணி மீண்டும் குறைந்த ஸ்கோர் எடுக்கும் என்பது போல் தெரிந்தது. அப்போது களத்தில் நம்பிக்கையாக தினேஷ் கார்த்திக் மட்டுமே நின்றார்.
இந்த நிலையில் ஆகாஷ் மதுவாலின் ஒரு ஓவரில் தேர்ட் மேன் திசையில் மட்டும் தினேஷ் கார்த்திக் நான்கு பவுண்டரிகள் அடித்து ஆச்சரியப்படுத்தினார். அவர் ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடியதன் மூலம் இந்த நான்கு பவுண்டரிகளையும் அடித்தார். மேலும் ஆகாஷ் மதுவாலின் ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் மீண்டும் பவுண்டரி சிக்ஸர்களாக நொறுக்கினார். மேலும் அரை சதமும் அடித்தார். அவர் 23 பந்தில் 53 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க : பும்ரா 3 அசத்தல் ரெக்கார்டுகள்.. ஆர்சிபி-க்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் முதல் பவுலராக மெகா சாதனை
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ரோகித் சர்மா அவரிடம் சென்று “பிரில்லியண்ட் டிகே.. நீ டி20 உலகக் கோப்பையில் விளையாடனும்” என்று நகைச்சுவையாக கூறினார். அதற்கு தினேஷ் கார்த்திக் அவரிடம் ஏதோ கூற, இந்தச் சம்பவம் களத்தில் மிகவும் சுவாரசியமாக அமைந்தது.