ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸில் இணையும் தேதி அறிவிப்பு.. தாமதமாக காரணம்.. முழு விபரம்

0
260
Rohit

நடப்பு 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி துவங்குகிறது. தொடர் துவங்க நான்கு நாட்கள் மட்டுமே இன்னும் இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்குபெறும் 10 அணிகளும் தங்களது பயிற்சி முகாம்களை முன்கூட்டியே அமைத்து, கிடைத்த வீரர்களைக் கொண்டு பயிற்சியை ஆரம்பித்தது. இதற்குப் பிறகு இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருந்த வீரர்கள் அதை முடித்துக் கொண்டு தங்கள் அணியின் பயிற்சி முகாம்களில் வந்து இணைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு அணியின் பயிற்சி முகாமில் எல்லா வீரர்களும் இணைந்த பிறகுதான், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கும் திட்டங்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் வலைப்பயிற்சியில் எந்த வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்? என்பதை பார்த்து, அதற்கேற்ற சில முடிவுகள் செய்யப்படும்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று என வென்ற பிறகு, இதுவரையில் இன்னும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் வந்து இணையாமல் இருக்கிறார்.

மேலும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஒன்பதாம் தேதி முடிவுக்கு வந்தது. இதன் பிறகு ரோகித் சர்மா விதர்பா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி பைனலை பார்ப்பதற்கு மும்பை வான்கடே மைதானத்திற்கு நேரில் சென்றார். ஆனாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமுக்கு வரவில்லை.

- Advertisement -

கேப்டன் மாற்றத்தால் எழுந்த சர்ச்சைகள்

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்திருக்கின்ற காரணத்தினால், ஏற்கனவே அந்த அணி குறித்து நிறைய யூகங்கள் சமூக வலைதளங்களில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இணையாமல் இருப்பது, இப்படியான யூகங்களுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : ஆர்சிபி வெற்றி.. நக்கல் செய்த ராஜஸ்தான்.. ஆனால் சிஎஸ்கே காட்டிய பெருந்தன்மை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து வெளியான செய்தியில், ரோகித் சர்மா இன்று 18ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி உடன் வந்து இணைவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அவர் தேசிய அணிக்காக நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடியதால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இணைவதற்கு காலதாமதம் ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 24ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.