5 இன்னிங்ஸ் முதல் முறை.. 260 பந்து.. ஹிட்மேன் ரோகித் ராஜ்கோட் ராஜா ஜடேஜா ராஜ்யம்

0
460
Rohit

குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணியின் பேட்டி யூனிட் அனுபவம் அற்றதாக இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

- Advertisement -

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 33 ரன்களில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஜெய்ஸ்வால், கில், பட்டிதார் என இளம் வீரர்கள் வரிசையாக வெளியேறினார்கள்.

8.5 ஓவரில் இந்திய அணி மூன்று விக்கெட் இழந்த பொழுது ரோகித் சர்மா உடன் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ராஜ்கோட் மைதானம் அவருடைய சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி தொடர்ந்து சிறப்பாக விளையாடியது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ரோஹித் சர்மா அரை சதம் அடிக்க, இந்திய அணி 92 ரன்கள் மூன்று விக்கெட் இழந்து முதல் செசன் முடிவில் இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது செசனில் இந்த ஜோடி தொடர்ந்து விளையாடுவது. ரோகித் சர்மாவை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அரை சதத்தை சொந்த மைதானத்தில் அடித்து அசத்தினார்.

மேலும் இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தாண்டியது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டியில் நான்கு இன்னிங்ஸ்கள் முடிந்திருக்க, இந்திய அணி ஒரு 100 ரன் பாட்னர்ஷிப் கூட அமைக்கவில்லை. தற்பொழுது ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா கூட்டணி முதல் முறையாக இதைச் செய்திருக்கிறது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி தேநீர் இடைவேளைக்கு தற்பொழுது ஆட்டம் இழக்காமல் சென்று இருக்கிறது. இரண்டாவது செசன் முழுவதும் விக்கெட் எதையும் தரவில்லை. 260 பந்துகளை சந்தித்து 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்திருக்கிறார்கள். ரோஹித் சர்மா 97 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 68 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : “310 பேர் கௌரவம்.. ஏமாற்றம் இருந்திருக்கு ஆனா விட்றாத தம்பி” – அனில் கும்ப்ளே சர்ப்ராஸ் கானுக்கு வாழ்த்து

தற்பொழுது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 52 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த ஜோடி பொறுப்பாக விளையாடிய தற்பொழுது இந்திய அணியை ஓரளவுக்கு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.