“310 பேர் கௌரவம்.. ஏமாற்றம் இருந்திருக்கு ஆனா விட்றாத தம்பி” – அனில் கும்ப்ளே சர்ப்ராஸ் கானுக்கு வாழ்த்து

0
206
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி மொத்தம் நான்கு மாற்றங்களை செய்திருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகேஷ் குமாருக்கு பதிலாக முகமது சிராஜ், அக்சர் படேலுக்கு பதிலாக காயத்திலிருந்து திரும்பிய ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

அடுத்து கேஎல் ராகுல் இடத்திற்கு சர்பராஸ் கான், கே எஸ் பரத் இடத்துக்கு துருவ் ஜுரல் இருவருக்கும் இந்திய அணியில் முதல் அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

விக்கெட் கீப்பிங் துருவ் ஜுரலுக்கு இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இதேபோல் சர்பராஸ் கானுக்கு இந்திய லெஜன்ட் சுழல் பந்துவீச்சாளர் டெஸ்ட் தொப்பியை வழங்கினார்.

இந்த நிலையில் இந்திய அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்து விட்டது. இதன் காரணமாக உடனடியாக சர்ப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் உடனடியாக பேட்டிங் செய்ய வர வேண்டி இருந்தது.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா உடன் ரவீந்திர ஜடேஜா களம் இறக்கப்பட்டார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடிய நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர் அமைத்து இருக்கிறது. இதனால் அறிமுக இளம் வீரர்களுக்கு ஏற்பட இருந்த அழுத்தம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் தொட்டியை வழங்கிய அனில் கும்ப்ளே வாழ்த்து கூறும் பொழுது “சர்பராஸ் கான் நீங்கள் கடந்து வந்த விதம் உண்மையிலே பெருமையாக இருக்கிறது. நீங்கள் சாதித்திருப்பது குறித்து உங்கள் அப்பாவும் குடும்பத்தாரும் பெருமைப்படுவார்கள்.

இதையும் படிங்க : நாங்களா சின்ன பசங்க?.. 2 நாள் 221 ரன்.. நியூசிலாந்துக்கு பயம் காட்டும் தென் ஆப்பிரிக்கா

நீங்கள் எல்லா கடின உழைப்பையும் கொடுத்து இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு சில ஏமாற்றங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் அடித்த ரன்கள் உங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறது. இன்று உங்களுக்கு நிறைய அற்புதமான நினைவுகள் இருக்கும். இது நீண்ட வாழ்க்கையின் ஆரம்பம். உங்களுக்கு 310 பேர் மட்டுமே விளையாடி இருக்கிறார்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” எனக் கூறியிருக்கிறார்.