சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை முறியடிக்க போகும் ரோகித் சர்மா.. ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வாய்ப்பு.!

0
366

16வது ஆசிய கோப்பை காண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து ஹைபிரிட் முறையில் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது.

இறுதிப்போட்டி உட்பட ஒன்பது போட்டிகள் இலங்கையில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய அணி 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது. சமீப காலங்களில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது

- Advertisement -

கடந்த முறை யுஏஇ நாட்டில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகள் டி20 வடிவில் நடைபெற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவி இரண்டாவது சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை இந்திய அணி நிச்சயமாக ஆசிய கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும். மேலும் அடுத்து வர இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான அணியும் ஆசிய கோப்பையில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் இருந்து பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்பதால் ஆசிய கோப்பைகளில் இந்திய அணியின் செயல்பாடு அனைவராலும் உற்று கவனிக்கப்படும்.

ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை முறியடிக்க இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது . இந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதம் எடுத்தால் அதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை அவர் சமன் செய்ய முடியும் . மேலும் இந்திய அணியின் சுற்றுச்சூர வீரரான விராட் கோலி குறைந்த போட்டிகளில் 13000 ரகளை கடந்த வீரர் என்ற சாதனை புரிவதற்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது.

அவரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை ஏழு முறை 50 பிளஸ் ரண்களை கடந்திருக்கிறார் . இதன் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து சாதனையை சமன் செய்துள்ளார் . இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய வீரரான நவ்ஜோத் சிங் சித்து ஏழு முறை 50 பிளஸ் ஸ்கோர் ஆசிய கோப்பைகளில் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

ஆசிய கோப்பை போட்டிகளிலேயே அதிகபட்சமாக 50 பிளஸ் ரன்கள் எடுத்திருப்பது சச்சின் டெண்டுல்கர் தான். இவர் 9 முறை ஆசிய கோப்பை போட்டிகளில் 50க்கும் அதிகமான ரண்களை எடுத்து இருக்கிறார். இறுதியாக 2012 ஆம் ஆண்டு இவர் விளையாடிய கடைசி ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அரை சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய கேப்டன் ஆன ரோகித் சர்மா ஏழு முறை ஆசிய கோப்பை போட்டிகளில் 50 பிளஸ் ரன்களை எடுத்திருக்கிறார் . தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் அவர் மேலும் இரண்டு 50 பிளஸ் ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் மூன்று முறை ஐம்பதற்கும் அதிகமான ரன்களை எடுத்தால் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கலாம்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியை இந்தியா கைப்பற்றியது . அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது தற்போது நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் ஃபார்மேட்டில் நடைபெற இருக்கிறது . உலகக்கோப்பைக்கு முன்பாக இந்த போட்டி நடைபெறுவதால் இது உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.