வரலாற்று சாதனையை எதிர்நோக்கி ரோகித் சர்மா.. வேறு யாருக்கும் கிடைக்காத கவுரவம்

0
1037


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கி வரும் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். தற்போது ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரையும், ரோகித் சர்மாவையும் பிரிக்க முடியாதது. அதற்கு காரணம், கேப்டனாக தன மழு திறமையை ரோகித் சர்மா இந்த தொடரில் தான் நிரூபித்தார்.


ஆசிய கோப்பை போன்ற ஒரு தொடரில் விராட் கோலி போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன் இல்லாமலேயே ரோகித் சர்மா, ஆசிய கோப்பையை 7வது முறையாக இந்தியாவுக்கு வென்று தந்து இருக்கிறார். தற்போது மீண்டும் கோப்பையை தக்க வைத்து கொண்டுள்ள ரோகித்துக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பாகிஸ்தான், இலங்கை போன்ற அணியை வீழ்த்தி ஆசியாவில் நாங்க தான் கிங் என்று சொல்லி கொள்ள ரோகித் சர்மாவுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

- Advertisement -


இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக முறை விளையாடிய வீரர்கள் என்ற பட்டியலில் ரோகித் சர்மாவும் சச்சின் டெண்டுல்கரும் தலா ஆறு முறை பங்கேற்றுள்ளனர். தற்போது வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றால் அதிக முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜடேஜா, தோனி மற்றும் அசாருதீன் ஆகியோர் தலா ஐந்து முறை விளையாடியுள்ளனர்.விராட் கோலி ,கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, சித்து ஆகியோர் தலா நான்கு முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றனர். ஆனால் ரோகித் சர்மாவின் குறி எல்லாம் டி20 உலகக் கோப்பை தொடர் மீது தான் உள்ளது.


அதற்கு முன் ரோகித் சர்மாவுக்கு ஒரு கடமை பாக்கி இரக்கிறத. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் டி20 போட்டியில் 8 போட்டியில் விளையாடி வெறும் 70 ரன்கள் தான் அடித்துள்ளார். சராசரி வெறும் 12 என்ற அளவில் உள்ளது. இதனால், ரோகித் பாகிஸ்தானுக்கு எதிராக பட்டையை கிளப்பி, தன்னுடைய ரெக்காட்டை சரிப்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பு வரும் 28ஆம் தேதி உருவாகியுள்ளது.

- Advertisement -