நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் நாற்பத்தி ஒன்பதாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன . இந்தப் போட்டி சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .
மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது .
சென்னை அணி இதற்கு முன்பு மோதிய லக்னோ அணியுடன் ஆட்டம் மழையால் தடைபட்டதால் இரண்டு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது . மும்பை அணி தனது முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் 215 ரன்கள் சேஸ் வெற்றி பெருந்தது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் .
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் இந்தப் போட்டி தடைபடுமா என்ற அச்சம் இருந்தது . ஆனால் போட்டி எவ்வித தடங்களும் இன்றி சிறப்பாக தொடங்கியது . டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். கேப்டனின் முடிவை சரி என்று நிரூபிப்பது போல சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை அணியில் ஒரு சிறிய மாற்றமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துவக்க வீரராக களம் இறங்கவில்லை . கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் துவக்க வீரராக களம் இறங்கினார் . இவர்கள் இருவர் அறிவிக்கட்டையும் ஆறு மற்றும் ஏழு ரன்களில் துஷார் தேஷ் பாண்டே மற்றும் தீபக்சஹார் ஆகியோர் கைப்பற்றினர். இதனால் மும்பை அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்திற்கு உள்ளானது இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு ஆட வந்த கேப்டன் ரோகித் சர்மாவிடமிருந்து ஒரு பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்த்தது அந்த அணி . இந்தத் தொடரில் அவர் சரியாக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்தப் போட்டியிலும் அவர் ரசிகர்களை ஏமாற்றியதோடு ஐபிஎல் போட்டியில் மோசமான சாதனை ஒன்றையும் செய்திருக்கிறார் . மூன்று பந்துகளை சந்தித்து ஆடிய ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் தீபக்சகர் பந்து
வீச்சில் ஆட்டம் இழந்தார் . கடந்த போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பதினாறாவது முறையாக டக் அவுட் ஆகி மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ரோஹித் சர்மா . ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட் ஆன வீரர் இவர் தான் . இவருக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக் அவுட்களுடன் இருக்கின்றனர்
👉MSD comes up to the stumps 😎
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
👉Rohit Sharma attempts the lap shot
👉@imjadeja takes the catch 🙌
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper 🎥🔽 #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7