ருதுராஜ் படிக்கல் தலைமையில் 2 இந்திய அணி அறிவிப்பு.. ஆஸிக்கு எதிராக மெகா தொடர்கள் நடக்கிறது

0
0

​ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஹோம் சீரிஸிற்கான இந்தியா ஏ ஸ்குவாடை பிசிசிஐ சமீபத்தில் அனவுன்ஸ் செய்துள்ளது. இதில் லிஸ்ட் ஏ மேட்ச்களுக்கான அணியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

​இந்தத் தொடர் குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு தரப்பில் பேசும்போது “செப்டம்பர் இருபத்திரண்டு முதல் புதுச்சேரியில் தொடங்கும் இந்த சீரிஸ் இந்திய இளம் வீரர்களின் திறமையை நிரூபிக்க ஒரு சிறந்த பிளாட்பார்மாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

​மேலும் ஹார்திக் பாண்டியா குறித்துத் தேர்வாளர்கள் தரப்பில் பேசும்போது “ஹார்திக் பாண்டியா தற்போது சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் தனது பிட்னஸ் பயிற்சிகளை முடித்து வருகிறார் அவருடைய பிட்னஸ் கிளியரன்ஸ் கிடைத்த பிறகு அவர் நிச்சயம் விளையாடுவார்” என்று கூறி இருக்கிறார்கள்.

​ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், ரஜத் படிதார், பிரியான்ஷ் ஆர்யா, குமார் குஷாக்ரா, பிரப்சிம்ரன் சிங், நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் தீர், குர்ஜப்னீத் சிங் மற்றும் யாஷ் தாக்குர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

​அதேபோல் அனாஃபிஷியல் டெஸ்ட் மேட்ச்களுக்கான கேப்டனாக தேவ்தத் படிக்கல் அனவுன்ஸ் செய்யப்பட்டுள்ளார். அந்த ஸ்குவாடில் அமன் மோகடே, ஆயுஷ் பாண்டே, யாஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என் ஜெகதீசன், நச்சிகேத் பூதே மற்றும் வைஷாக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -