இந்திய அணியில் என் நிலைமை இந்த விஷயத்தில் மோசம்.. ஆனாலும் பொறுத்துக்கிட்டு இருக்கேன் – சிவம் துபே பேச்சு

0
0

​ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 சீரிஸ் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே தனது பேட்டிங் பொசிஷன் குறித்து வெளிப்படையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

​தனது ரோல் குறித்து சிவம் துபே பேசும்போது “என்னுடைய பேட்டிங் பொசிஷன் நிலையாக இல்லாததால் அது எப்போதுமே எனக்கு ஒரு கடினமான விஷயம் தான், அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதற்கு ஏற்ப எத்தனாவது ஓவரிலும் இறங்க தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் பௌலிங் பிளான் குறித்து அவர் பேசும்போது “எந்த ஓவரில் பந்துவீச அழைப்பார்கள் என்ற பிக்ஸட் பிளான் எதுவும் இல்லை, அதனால் எந்த சூழ்நிலையிலும் பந்துவீச தயாராக இருக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

​மிடில் ஆரடரில் 5 மற்றும் 6-வது இடத்தில் களமிறங்கி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ள இவர், டி20 உலகக்கோப்பை வெற்றிகளிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்துள்ளார்.
​இந்திய அணியின் பௌலிங் கோச் மோர்னே மோர்கல் வழிகாட்டுதலில் தனது பௌலிங் ஸ்கில்லை மேலும் மெருகேற்றி வரும் சிவம் துபே, ஆஃப்கானிஸ்தான் தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -