“ரோகித் சர்மாவுக்கு சுயநலம் கிடையாது.. அதனால நாங்க எல்லாம் நிம்மதியா விளையாடறோம்!” – கேஎல்.ராகுல் வெளிப்படையான முக்கியமான பேச்சு!

0
1848
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் வலிமையாக இருக்கிறது!

இந்த உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே பேட்டிங் டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது. அந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் மிகச் சிறப்பாக இந்திய அணியைக் கொண்டு வெற்றிக்கு சேர்த்தனர்.

- Advertisement -

இதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் அணியை மிக எளிதாக வெற்றிக்கு கொண்டு சென்றது. அவர் பவர் பிளேவில் மிக வேகமாக ரன் அடிக்கின்ற காரணத்தினால், ஏறக்குறைய ஆட்டம் அங்கேயே முடிந்து விடுகிறது.

இதன் காரணமாக அடுத்து வருகின்ற பேட்ஸ்மேன்கள் ரன் அழுத்தம் ஏதும் இல்லாமல் மிக எளிதாக தாங்கள் விரும்பும் படி விளையாட முடிகிறது. இதனால் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டின் வேலையும் மிக எளிதாகிறது. நேற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 40 பந்துகளில் 48 ரன்கள் அதிரடியாக எடுத்து அசத்தினார்.

கேப்டன் ரோகித் சர்மா பற்றி பேசி உள்ள கேஎல்.ராகுல் “பந்து வீச்சாளர்களை அவர் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்கி விளையாட கூடியவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். பல ஆண்டுகளாக ஒரு அற்புதமான வீரராக இருந்து வருகிறார். அவரது இன்னிங்ஸை எப்படி வேகப்படுத்துவது என்பது குறித்து அவருக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

விக்கெட்டுகள் ஏதாவது இழந்தாலும் தொடர்ச்சியாக பவுண்டரிக்கு செல்வது எப்படி என்றும் அவருக்கு தெரியும். ஆனால் அவர் இதை எல்லாம் சரியான கிரிக்கெட் ஷாட்கள் மூலம் செய்து வருகிறார். அவர் பந்தை ஸ்லாக் செய்வது, அதேபோல புதுமையான ஷாட்கள் விளையாடுவது என்று செய்து நீங்கள் பார்க்க முடியாது. அவர் சமநிலையுடன் இருந்து சரியான கிரிக்கெட் ஷாட்கள் விளையாடுகிறார்.

பவர் பிளேவில் இதுபோன்ற பேட்டர்கள் இருந்தால் எங்களுக்கு மிடிலில் வேலை குறைவாகிவிடும். குறிப்பாக கடந்த சில ஆட்டங்களில் நான் சேஸ் செய்ய சென்ற பொழுது, 60, 70 ரன்கள்தான் தேவைப்பட்டது. அந்த இடத்தில் அந்த ரன்னை எடுக்க 150 பந்துகளுக்கு மேல் இருந்தது.

இப்படி ரோஹித் சர்மா எங்களுடைய வேலையை மிகவும் சுலபமாக்கி வைத்து விடுகிறார். மேலும் மற்றவர்கள் சேர்ந்து மொத்த அணியாக முன்னேறி செல்வதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார்!” என்று கூறியிருக்கிறார்!

இந்திய அணி இதற்கு அடுத்து பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக விளையாட இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டி முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!