ஸ்கிரிப்ட் இல்ல உண்மைய சொல்றேன்.. ஜெயிச்சதும் மண்ணை சாப்பிட காரணம் இதுதான்.. ரோகித் சர்மா விளக்கம்

0
1119

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்று தற்போது இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலகக்கோப்பையோடு தாயகம் திரும்புகிறது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தில் இருந்த புற்களை பிடுங்கி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அதற்கான காரணத்தையும் ரோஹித் சர்மா கூறி இருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு 50 ஓவர் டி20 உலக கோப்பை எப்படி தோல்வியில் முடிந்ததோ, அதற்கு நேர் மாறாக 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மகிழ்ச்சியோடு அவருக்கு விடை கொடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்வி இந்திய அணியில் பெரிய மாற்றங்களை செய்ய தூண்டியது.

அதுவரை டி20 கிரிக்கெட் தொடரை பொறுமையாக அணுகிய இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி தோல்விக்கு பிறகு ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு மாற்றியது. கேப்டன் ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஒரு ஆட்டத்தை எப்படி ஆக்ரோஷமாக அணுகுவது என்று இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டினார்

இது தற்போது நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் தொடர்ந்தது. முதல் பந்தில் இருந்தே எதிரணியை தண்டிக்கத் தவறாத ரோகித் சர்மா, பின்னால் வந்த வீரர்களுக்கும் அதே வழியை காட்ட அவர்களும் அதே ஆட்டமுடையை பின்பற்றி தற்போது இந்தியாவிற்கு மறக்க முடியாத வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா வெற்றியைக் கொண்டாடும் விதமாக மைதானத்தில் இருந்த புற்களை சாப்பிட்ட நிலையில் அதற்கான விளக்கத்தையும் அவரே கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “சில விஷயங்களை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை விவரித்து கூற முடியாது. உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் உள்ளுணர்வின் வெளிப்பாடு என்று. நான் அவ்வாறு செய்ததற்கு காரணம் இந்த மைதானத்தில்தான் நாங்கள் இறுதிப் போட்டியை வென்றோம். இந்த மைதானத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பதற்காகவே அவ்வாறு செய்தேன். இதன் பின்னணியே இந்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த மைதானத்தில் தான் எங்கள் கனவு அனைத்தும் நனவாகியது.

இதையும் படிங்க:மில்லரின் சர்ச்சை கேட்ச்.. பவுண்டரி லைன் நகர்த்தி வைக்கப்பட்டதன் ரகசியம்.. வெளிவந்த உண்மை காரணம்

இந்த உணர்வு நிஜமாகவே மிக அற்புதமாக இருக்கிறது. நாங்கள் இன்னமும் அதிலிருந்து வெளிவரவில்லை. இவை அனைத்துமே தற்போது எங்களுக்கு ஒரு கனவு போல இருக்கிறது. இந்த ஒரு உணர்வுக்கு தான் நாங்கள் இத்தனை நாட்களாக கனவு கண்டோம். இதற்காகத்தான் இவ்வளவு காலமாக ஒரு யூனிட் ஆக கடினமாக உழைத்தோம். நீங்கள் உண்மையிலேயே ஒரு விஷயத்திற்காக கடுமையாக உழைத்து அதில் கடைசியில் வெற்றி பெறும்போது, அந்த உணர்வுகளை மகிழ்ச்சியில் வெளிப்படுத்த முடியாது” என்று கூறி இருக்கிறார்.