இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர் விமல் குமார் சமீபத்தில் விராட் கோலி ரசிகர்கள் தன் மீது கோபப்பட்டதற்கும், அதற்கு விராட் கோலி என்ன கூறினார்? என்பது குறித்தும் சுவாரசியமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது ஆண்டிகுவா மைதானத்திற்கு வெளியே தைரியமான அதிரடி பேட்டிங்க்கு சொந்தக்காரரான லெஜன்ட் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ரிச்சர்ட்ஸ் குறித்து புகழ்ந்து எழுதிய பத்திரிக்கையாளர் விமல் குமார் அதில் “அசல் ராஜாவின் தேசத்திற்கு வரவேற்கிறோம். அரசர்களுக்கு அரசர் என்று ஒருவர் இருந்திருந்தால் அது சூப்பர் கிங் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்கள் மட்டும்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விமல் குமார் அவரை ஒரிஜினல் கிங் என்றும், அரசர்களுக்கு எல்லாம் அரசர் என்றும் குறிப்பிட்ட காரணத்தினால், விராட் கோலி கிங் என்று அழைக்கும் வழக்கமுடைய அவரது ரசிகர்கள் இதனால் பத்திரிக்கையாளர் விமல் குமார் மீது கோபப்பட்டார்கள். தற்பொழுது இதுகுறித்து விமல் குமார் விராட் கோலி இடம் கூறிய பொழுது அவர் என்ன தெரிவித்தார் என்பது குறித்து சுவாரசியமான தகவலை விமல் குமார் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து பத்திரிக்கையாளர் விமல் குமார் பேசும்பொழுது ” நேற்று நான் விராட் கோலி இடம் ரிச்சர்ட்ஸ் பற்றி வெளியிட்ட காட்டும் பொழுது, உங்களை கிங் என்று அழைக்கும் ரசிகர்கள் இதற்காக கோபப்படுகிறார்கள் என்று கூறினேன். அதற்கு விராட் கோலி அவர்கள் ‘நீங்கள் யார் என்று எத்தனை வருடமாக உங்களுடன் பழகிய எனக்குத் தெரியும். எனவே இதற்கெல்லாம் நீங்கள் எப்பொழுதும் விளக்கம் சொல்லாதீர்கள்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : பாபர் அசாம் டீம் எதுவும் செய்யல.. நாங்களாவது நாட்டுக்காக இந்த கோப்பையை ஜெயிக்கனும் – யூனுஸ் கான் பேட்டி
இந்த உரையாடலின் போது நாங்கள் இருவரும் வெடித்து சிரித்தோம். நான் இதற்கு முன்பு நவீன காலத்தின் அரசரான விராட் கோலியை இவ்வளவு மகிழ்வாக பார்த்தது கிடையாது. இந்த டி20 உலக கோப்பை வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.






