இந்திய கிரிக்கெட் கமெண்ட்ரி மோசமா இருக்கு.. சுத்தமா தரமே கிடையாது.. எல்லாமே அஜெண்டாதான் – ரோகித் சர்மா விமர்சனம்

0
221
Rohit

இந்திய கிரிக்கெட் வர்ணனை தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கிரிக்கெட் குறித்து கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு எதுவும் இவர்களிடம் இல்லை எனவும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு முடிவை ரோகித் சர்மா அறிவித்தார். இன்று இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? அவர்கள் வர்ணனையில் ஒரு குறிப்பிட்ட வீரரை தாக்குவது மட்டுமே இருக்கிறது, அவர்களிடமிருந்து புதிதாக வருபவர்கள் கற்றுக்கொள்ள எதுவுமே இல்லை என ரோகித் சர்மா அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஊதிப் பெருக்கிறதுதான் வேலை

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “நீங்கள் சர்ச்சைகளை உருவாக்குவதிலும் விஷயங்களை ஊதிப் பெருக்குவதிலும்தான் கவனம் செலுத்துகிறீர்கள். தற்போது பத்திரிகைகளின் தரம் குறைந்துவிட்டது. முன்பு எப்போதும் கிரிக்கெட்டை சுற்றி மட்டும்தான் பேச்சுகள் இருக்கும். இப்போது உங்கள் கட்டுரைகளை படிக்க வைப்பதும், லைக்ஸ் வாங்குவது மட்டும்தான் வேலையாக இருக்கிறது. விளையாட்டு பற்றி பேசுவது குறைந்துவிட்டது. மேலும் உத்திகள் பற்றிய அலசல்கள் தொலைந்து விட்டது”

“நாம் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கிறோம் அப்போது வர்ணணையை கேட்கிறோம். அதுவே நாம் ஆஸ்திரேலியா செல்லும் பொழுது வர்ணனை வேறு விதமாகவும், அதுவே நாம் இந்தியாவில் இருக்கும் பொழுது வேறு விதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. நேர்மையாக சொல்கிறேன் இங்கே ஒரு வீரரை தனிமைப்படுத்தி அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவதுதான் வழக்கமாக இருக்கிறது”

- Advertisement -

மசாலாவை சேர்க்க வேண்டாம்

“விளையாட்டு பற்றி தெரிந்து கொள்ள இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதற்கு மசாலா தேவை? மேலும் ரசிகர்களுக்கு மசாலா கொஞ்சம் தேவையாக இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக ஒருவருடைய ஃபார்ம் ஏன் குறைகிறது, எங்கே தவறு நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். வீரர்களை மதிக்கும்போதுதான் இதையெல்லாம் சொல்ல முடியும்”

இதையும் படிங்க : சிஎஸ்கே ஆயுஸ் மத்ரேவை வாங்கிய சூரியகுமார் யாதவ்.. ஏலத்தில் கலக்கல் விலைக்கு அசத்தல்.. புதிய தொடர் ஆரம்பம்

“மேலும் சில சமயங்களில் நாங்கள் விளையாடிய போட்டிகளில் விஷயங்கள் எங்கள் கைகளை விட்டுப் போய்விட்டது. நியூசிலாந்துக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வி அடைந்தோம். இதற்காக நாங்கள் முற்றிலும் விமர்சனத்திற்கு தகுதியானவர்கள். அதே சமயத்தில் வீரர்களை விமர்சிப்பதற்கு ஒரு சரியான வழி இருக்கிறது. அதே சமயத்தில் அஜெண்டாவுக்காக ஒரு வீரரை விமர்சிப்பது எனக்கு பிடிக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -