சிஎஸ்கே ஆயுஸ் மத்ரேவை வாங்கிய சூரியகுமார் யாதவ்.. ஏலத்தில் கலக்கல் விலைக்கு அசத்தல்.. புதிய தொடர் ஆரம்பம்

0
279
Surya

தற்போது சிஎஸ்கே அணிக்கு இளம் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் மும்பையை சேர்ந்த 17 வயதான ஆயுஸ் மத்ரேவை இந்திய டி20 அணியின் சூரியகுமார் யாதவ் தான் விளையாடும் டி20 லீக் அணிக்கு வாங்கி இருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையில் டி20 லீக் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக்குக்கு சூரியகுமார் யாதவ் ரகானே ஆகியோர் ஐகான் வீரர்களாக இருக்கிறார்கள். மேலும் சிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர் மற்றும் பிரிதிவிஷா மாதிரியான நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திரங்கள்

இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி மும்பை டி20 லீக் தொடருக்கு ஏலம் நடைபெற்றது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் ஆல் ரவுண்டர் சர்பராஸ் கான் தம்பியான முசிர் கானை ஆர்க்ஸ் அந்தேரி அணி 15 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.

மேலும் மும்பை அணி நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த இளம் ஆல்ரவுண்டரும் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வரும் சூரியன்ஸ் ஷெட்ஹேவை மும்பை நார்த் ஈஸ்ட் அணி 13.75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஏறி விளையாடிய சூரியகுமார் யாதவ்

இந்த மும்பை நார்த் ஈஸ்ட் அணிக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தான் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சூரியன்ஸ் ஷெட்ஹேவை வாங்கியது மட்டும் இல்லாமல் அடுத்து மிக முக்கியமாக ஆயுஸ் மத்ரேவை 14.75 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி அணியை மேலும் வலிமையாக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் ரோகித்துக்கு ஃபோன் பண்ணி இதை செய்ய போறேன்.. என்னால அத நம்பவே முடியல – ரகானே பேட்டி

சிஎஸ்கே அணிக்காக ஆயுஸ் மத்ரே ஆர்சிபி அணிக்கு எதிராக 48 பந்துகளில் அதிரடியாக 94 ரன்கள் குவித்த பொழுது சூரியகுமார் யாதவ் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 17 வயதான இளம் வீரரின் திறமையை உணர்ந்து அவரை தன்னுடைய அணிக்கு அதிகபட்ச விலை கொடுத்து வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -