“ரோகித் சர்மா உடலில் சுயநல எலும்புகள் கிடையாது!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடியான அறிக்கை!

0
1178
Rohit

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்த அணிக்கும் வழிகாட்டும் விதமாக அவர் கேப்டன்ஷியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டவராக இல்லை. ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் டாப் ஆர்டரில் வந்து, அதிரடியான அச்சமற்ற அணுகுமுறையை காட்டி, அடுத்து வரக்கூடிய எல்லா பேட்மேன்களின் வேலையையும் எளிதாக்குகிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா எடுத்ததும் காட்டக்கூடிய நம்பிக்கையான தைரியமான மனநிலை, மொத்த அணிக்கும் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. இது அனைவரையும் நேர்மறை சிந்தனையோடு காலத்தில் செயல்பட வைக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு திறமை எவ்வளவு காரணமோ, அதேபோல் இந்திய அணியினரின் மனநிலையும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தித் தர தயங்காத ரோகித் சர்மா, பவர் பிளேவில் இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட்டுகள் வேகமாக விழுந்த பொழுது, உடனே தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றி அணிக்காக பொறுமையாகவும் விளையாடி கரை சேர்த்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரோஹித் சர்மாவை யாராலும் தடுக்க முடியாது. பீல்டிங் விதிமுறைகள் அவரது பேட்டிங்கை பாதிக்க வைக்காது. அவர் அடிக்கும் பொழுது பந்து ஸ்டாண்டுக்குள் செல்கிறது. எப்பொழுதும் அவர் உடம்பில் சுயநல எலும்பு கிடையாது. அவர் பேட் செய்வது அச்சமற்ற வழி.

- Advertisement -

உண்மையில் அவர் மிகவும் சிறப்பாக பேட் செய்கிறார். பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்திலிருந்து ஆறாவது இடம் வரை வரக்கூடிய எந்த பேட்ஸ்மேன்களும் ஸ்ட்ரைக்ரேட் பற்றி கவலைப்பட வேண்டியது கிடையாது. அதை இங்கிலாந்து அணியுடன் 25 ரன்னுக்கு மூன்று விக்கெட் விழுந்த பொழுது அவர் பொறுப்பாகவும் விளையாட முடியும் என்று காட்டினார்.

ஒரு கேப்டனாக அவர் பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார். உங்களிடம் ஐந்து சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் கூட, நீங்கள் ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ரோகித் சர்மா இதற்கு விதிவிலக்கானவர். ஒரு நல்ல கேப்டனாக இல்லாமல் இப்படி செயல்பட முடியாது!” என்று கூறி இருக்கிறார்!