கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக பால் பாக்கெட்களை ரோஹித் சர்மா டெலிவரி செய்தார் – யாரும் அறியாத தகவல்களை பகிர்ந்த ஓஜா!

0
222
Ojha

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனான தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவரது இளம் வயதில் இருந்தே மிக திறமையான வீரர் என்று பல முன்னாள் பெரிய வீரர்களால் கணிக்கப்பட்டவர்.

அவருடைய ஆரம்பம் காலம் தொட்டு அதாவது அண்டர் 15 காலத்தில் இருந்து அவருக்கு நண்பராக இருந்து வருபவர் முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா. மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் தொடரை வென்ற பொழுதும் மும்பை இந்தியன்ஸ் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற பொழுதும் ரோகித் சர்மா உடன் இணைந்து விளையாடியவர்.

- Advertisement -

தற்பொழுது இவர் ரோகித் சர்மா குறித்து வெளியில் யாருக்கும் தெரியாத பல முக்கியமான விஷயங்களை தனது நட்பை பின்னோக்கி திரும்பிப் பார்த்து ஜியோ சினிமாவில் பகிர்ந்து இருக்கிறார்!

ரோஹித் சர்மா உடனான தனது நட்பை பேசும்பொழுது ” ரோஹித் சர்மா ஒரு நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் கிட் வாங்குவதற்கு அதற்கான பணம் அவருக்கு எவ்வாறு கடினமாக இருந்தது என்பது குறித்து பேசும்பொழுது ஒருமுறை அவர் உணர்ச்சிவசப்பட்டது எனக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அவர் தனது கிரிக்கெட் கிட்களை வாங்குவதற்காக அப்பொழுது பால் பாக்கெட் டெலிவரியும் செய்தார். இப்பொழுது எங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது, தாங்கள் எப்படி ஆரம்பித்தோம் எங்கு சென்றோம் என்று நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்.

15 வயதில் கிரிக்கெட்டில் ஆரம்பித்த தங்களது நட்பை குறித்து பேசிய அவர்
” ரோகித் சர்மாவை நான் முதலில் பார்த்த பொழுது அப்பொழுது அவரை எல்லோரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அவருக்கு எதிராக விளையாடி அவரது விக்கட்டையும் வீழ்த்தினேன். ரோகித் வழக்கமான ஒரு பாம்பே பையனாக இருந்ததால் அதிகம் பேசவில்லை ஆனால் எனது பந்துவீச்சை ஆக்ரோஷமாக விளையாடினார். ஏன் இவர் இப்படி ஆக்ரோஷமாக என்னிடம் நடந்து கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது!” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஓஜா
” 2008இல் ஐபிஎல் தொடரின் போது டி20 கிரிக்கெட் நிறைய பேருக்கு அந்நியமான ஒன்றாக இருந்தது. அப்பொழுது நாங்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினோம். அந்த நேரத்தில் டி20 போட்டிகளை எப்படி அணுகலாம்? டி20 யில் பந்துவீச்சில் எப்படி ஒரு பந்துவீச்சாளர் ஆக்ரோஷமாக இருக்கலாம்? அதற்கு மிடில் ஓவர்களில் அவர் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று எனக்குப் புரிய வைத்தார். அங்கிருந்தே அவர் ஒரு தலைவராக எப்படி சிந்திக்கிறார்? மற்றவர்களை விட ஒரு படி மேலே போய் இருக்க முயற்சித்தார் என்று நான் புரிந்து கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்!