ரோஹித் ஷர்மாவிடம் இருந்து டி20ஐ கேப்டன்சி பறிக்க வேண்டும் ; காரணம் இதுதான் – விரேந்தர் சேவாக் அதிரடிப் கருத்து

0
164
Virender Sehwag and Rohit Sharma

இந்திய அணியின் பிரபல முன்னாள் அதிரடி வீரர் ரோகித் சர்மா மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருப்பது குறித்தும், அவரது பணிச்சுமை குறித்தும், அவரது பணிச்சுமையை எவ்வாறு இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் குறைக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்!

ரோகித் சர்மாவிற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. அவர் தனது பணிச்சுமையின் காரணமாக டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக, கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அறிவித்து விலகினார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும், டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக தொடரவே விரும்பி இருந்தார். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன்தான் அணிக்கு இருக்க வேண்டுமென்ற நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் கடைப்பிடிப்பதால், விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியைப் பறித்து ரோகித் சர்மாவிடமே தந்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு, டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகிக்கொள்வதாய் அறிவிக்க, அந்தப் பொறுப்பும் ரோகித் சர்மாவிடமே வந்தது. இதெல்லாம் எந்தவித திட்டமிடலுக்கும் நேரமில்லாமல் நடந்துவிட்டது.

மேலும் 35 வயதான ரோகித் சர்மா சமீபக் காலங்களில் அதிகப்படியாய் காயம் அடைவதால், அவருக்குப் பணிச்சுமையைக் குறைத்துச் சரியான ஓய்வளிக்க வேண்டிய நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உள்ளது. அவர் கேப்டனாய் இருப்பதால், ஏதாவதுதொரு வடிவ கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதே சரியாக இருக்கும்.

- Advertisement -

தற்போது இதைப்பற்றி வீரேந்திர சேவாக் தனது யோசனையைத் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் ” ரோகித் சர்மாவை டி20 இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிப்பது, அவரது பணிச்சுமை மற்றும் மனச்சோர்வை நிர்வகிக்க உதவும். அடுத்து இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக புத்துணர்ச்சியோடு அவர் பணியாற்ற உதவும்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் “ரோகித் சர்மா இல்லாத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலும், இந்தியாவில் டி20 தொடரில் ரிஷாப் பண்ட்டும், அயர்லாந்தில் டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்கள். மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் ஒரே கேப்டன் என்கிற வழிமுறையைத்தான் இந்திய அணி நிர்வாகம் கடைப்பிடிக்கும் என்றால், அதற்குத் தற்போது சரியானவர் ரோகித் சர்மாதான்” என்றும் கூறியிருக்கிறார்!