நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய உள்நாட்டு இளம் வீரர்களில் பெரிய அளவில் நம்பிக்கை கொடுப்பவராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் இருந்து வருகிறார். அவருடைய ஆல் ரவுண்டு திறமைக்கான வாய்ப்புகள் குறித்து பேசி இருக்கிறார்.
ரியான் பராக் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் உடன், 483 ரன்கள் குவித்திருக்கிறார். அதிகபட்சமாக ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடைய ரன் ஆவரேஜ் 60, ஸ்ட்ரைக் ரேட் 153என ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும் இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 32 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
மிகக் குறிப்பாக இவர் அதிரடியாக விளையாடுகிறார் என்பது மட்டும் இல்லாமல், மிகவும் தரத்துடன் சரியாக விளையாடுகிறார் என்பது இவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. தைரியமாக இருப்பதோடு ஆட்டத்தின் சூழ்நிலை புரிந்தும் விளையாடக் கூடியவராக இருக்கிறார். மேலும் இவர் பகுதி நேர ஆப் ஸ்பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர் எதிர்கால இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இருந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ரியான் பராக் அசாதாரணமான வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். அவர் பேட்டிங் அணுகுமுறை மிகத் தைரியமாக இருந்தது. தனி ஒரு வீரராகவும் கேப்டனாகவும் முன் நின்று அசாம் மாநில அணியை கௌரவமான இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். இதன் காரணமாகவே அவருக்கு தற்போது ராஜஸ்தான் அணி நிர்வாகம் பேட்டிங்கில் நான்காவது இடத்தை கொடுத்தது. அதை அவர் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து ரியான் பராக் பேசும் பொழுது “எங்கள் அணியின் உரையாடல்கள் எப்பொழுதும் நேர்மறையாகவே இருந்திருக்கிறது. நாங்கள் கடந்த மூன்று ஆட்டங்களில் செய்த சிறிய தவறுகளில் இருந்தும் கூட பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சிறப்பாக செய்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த காரணத்தினால் எல்லாவற்றையும் தவறாக செய்து விட்டோம் என்கின்ற அர்த்தம் கிடையாது.
இதையும் படிங்க : டி20 உ.கோ.. சாம்சன் ரிஷப் பண்ட் யார் ஆடனும்? 2 பேரும் ஆடலாமா – கம்பீர் நச் பதில்
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆறாவது பந்து வீச்சாளர் இயல்பாக வந்து விடுகிறார். எனவே இவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட நாளில் ரன்களை விட்டுத் தரும் பொழுது தான் ஏழாவது பந்துவீச்சாளருக்கான வாய்ப்பு கிடைக்கிறது. என்னுடைய பந்துவீச்சு வாய்ப்புகள் குறித்து எனக்கு கலவையான எண்ணங்கள் இருக்கிறது. எனக்கு பந்து வீசுவதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சாம்சன் பாய் என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பதால், நான் தொடர்ந்து வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.