சச்சினின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா..! அடுத்தது கங்குலி, தோனி தான்

0
1646

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 2021 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக தலைமை தாங்கி மும்பை அணிக்கு ஐந்து முறை கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார்.

அதேபோன்ற ஒரு ஆதிக்கத்தை ரோகித் சர்மா இந்திய அணியிலும் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஐசிசி தொடர்களின் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் ஷர்மாவுக்கு கடைசி வாய்ப்பாக நடப்பு ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடர்தான் இருக்கிறது.

- Advertisement -

இதில் இந்தியா கோப்பை வென்றால் ரோகித் சர்மா காலத்தால் அழியாத பெயரை பெற்று விடுவார். இந்த நிலையில் 2023 -25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் தொடங்கியது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த நிலையில் கேப்டனாக ரோகித் சர்மா சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார். பேட்ஸ்மனாக பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் ஒரு கேப்டனாக சோபிக்கவில்லை. அவருடைய காலத்தில் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இதனால் கடுப்பாகி தமக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என்று அவர் சென்று விட்டார். 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சச்சின் கேப்டனாக தலைமை தாங்கி வெறும் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் 8 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு உள்ள ரோஹித் சர்மா ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்று சச்சினை பின்னுக்கு தள்ளி உள்ளார். இதைப் போன்று ரஹானே மற்றும் அஜித் வாடேகர் ஆகியோரையும் நான்கு வெற்றிகளை இந்திய கேப்டனாக பெற்றிருந்தார்கள். அவர்களையும் ரோகித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி 40 வெற்றிகளுடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தோனி 27 வெற்றிகள் உடனும், கங்குலி 21 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 19 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றால் கங்குலி சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.