இன்று நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி இரண்டு மெகா சாதனைகள் படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் என்ற மும்பை இந்தியன்ஸ் அணி தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஜானி பேர்ஸ்டோ நுழைந்ததும் அதிரடி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கல்டன் நாடு திரும்பி விட்டதால் புதிதாக இணைந்துள்ள ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக வந்து அதிரடியில் மிரட்டினார். 22 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியால் பவர் பிளேவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பில்லாமல் 79 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் தொடர்ந்து பதினைந்தாவது போட்டியாக 25 ரன்களை தாண்டி 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த இளம் வீரர் திலக் வருமா 11 பந்துகளில் அதிரடியாக 25 ரன்கள் எடுத்தார்.
ரோகித் சர்மா சாதனை அதிரடி
இந்த நிலையில் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்து 50 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் இழக்காமல் 22 ரன்கள் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க : இங்கிலாந்து ஏ டெஸ்ட்.. கருண் நாயர் அசத்தல் சதம்.. சர்பராஸ் கான் மாஸ் அதிரடி.. ஜெய்ஸ்வால் ஏமாற்றம்
இன்று பிளே ஆப் சுற்றில் 80 ரன்கள் தாண்டி அதிக வயதில் எடுத்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படித்திருக்கிறார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. இதற்கு முன்பு மைக்கேல் ஹசி மும்பைக்கு எதிராக 37 வயதில் பிளே ஆப் சுற்றில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக ரோகித் சர்மா சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக பிளே ஆப் சுற்றில் சூரியகுமார் யாதவ் 71 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து இருந்தார்.






