ரோகித் சர்மா இந்த போட்டியிலும் 2 மெகா உலக சாதனைகள்.. பங்களாதேஷை வைத்து பட்டையை கிளப்பும் இந்திய அணி!

0
767
Rohit

இன்று உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை புனே மைதானத்தில் வெளிப்படுத்தி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி முதல் விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக திரும்பி வந்து பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்தினார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் விளையாடி எட்டு விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அரை சதம் அடித்தார்கள். இவர்களுக்கு அடுத்து மகமதுல்லா 48 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பான வந்து வீச்சில் செயல்பட்டார்கள். ஜடேஜா மற்றும் ப
பும்ரா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு துவக்கம் தர களம் இறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வழக்கமான தாக்குதல் பாணியில் துரிதமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

பவர் பிளேவில் ரோஹித் சர்மா அதிரடி காட்ட, கில் கொஞ்சம் அடக்கி வாசித்தார். இதற்கு அடுத்து பவர்பிளே முடிவதற்கான கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை கில் பறக்க விட்டார். இதேபோல் ரோகித் இரண்டு சிக்ஸர்களை இந்தப் போட்டியில் அடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா இரண்டு உலக சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததின் மூலம், ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற உலகச்சாதனையை படைத்தார்.

ரோஹித் சர்மா – 2023 – 61 சிக்ஸர்
இயான் மோர்கன் – 2019 – 60 சிக்ஸர்
ஏபி.டிவில்லியர்ஸ் – 2015 – 59 சிக்ஸர்
பிரண்டன் மெக்கலம் – 2014 – 54 சிக்ஸர்

மேலும் உலகக்கோப்பையில் சேஸ் செய்யும் பொழுது அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலகச்சாதனையையும் ரோகித் சர்மா படித்திருக்கிறார்.

ரோஹித் சர்மா – 754 ரன்கள்
ஷகிப் அல் ஹசன் – 743 ரன்கள்
அர்ஜுன ரனதுங்கா – 727 ரன்கள்
ஸ்டீபன் பிளம்மிங் – 692 ரன்கள்
பிரைன் லாரா – 682 ரன்கள்
ஜாக் காலிஸ் – 680 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் – 546 ரன்கள்