உலகக்கோப்பை தொடர்பாக அஸ்வினின் ஐடியாவிற்கு ஓகே சொன்ன ரோஹித் !

0
514
Ashwin

நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆடி வருகிறது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது .

தாசில் வெற்றி பெற்ற முதலில் ஆடிய இந்திய அணி தற்போது வரை 95 ரண்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.ரோஹித் சர்மா 34 ரண்களிலும் விராட் கோலி 8 ரண்களிலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் டிங்கர் ஒரு விக்கெட்டையும் சான்ந்தனர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

போட்டிக்கு முதல் நாள் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது பேசிய ரோஹித் சர்மா உலகக் கோப்பையின் போட்டித் தொடர்களின் ஆட்டம் பற்றி பேசியிருந்தார் . இந்த பேட்டியின் போது அவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆலோசனைகள் சரியானது என்று குறிப்பிட்டார் .

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த ரோஹித் சர்மா “உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடும் அணிகளுக்கும் வாய்ப்புகள் சமமாக இருக்க வேண்டும் . எந்த ஒரு அணிக்கும் பனிப்பொழிவின் காரணமாக சாதகமாக அமைந்துவிடக் கூடாது”என்று தெரிவித்தார் .

- Advertisement -

உலகக்கோப்பை நடைபெறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பகல் இரவு போட்டிகளில் வழக்கமான நேரத்திற்கு சிறிது முன்பாகவே தொடங்கினால் எந்த அணிக்கும் சாதகமாக இருக்காது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்

இதே கருத்தை ஆமோதித்து பேசிய ரோஹித் சர்மா போட்டிகளை கொஞ்சம் முன்னதாகவே தொடங்குவது பனிப்பொழிவினால் ஒரு அணிக்கு சாதகமாக அமைவது தடுக்கப்படும் என கூறினார் . எனினும் போட்டி தொடங்கும் நேரங்களை பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களுமே முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார் ரோஹித் எந்த ஒரு அணிக்கும் சாதகம் இன்றி போட்டிகள் சமமான சூழ்நிலையில் நடத்தப்பட்டால் உலகைக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் போட்டிகள் நன்றாக அமையும் என தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 50 ஓவர் கண உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன . இந்தப் போட்டிகளுக்காக இந்தியா இப்போதே தயாராகி வருகிறது . இலங்கை அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறது ..

- Advertisement -