செல்லப்பிள்ளையை டெஸ்ட் அணிக்கு கொண்டு வர ரோகித் திட்டம்..சரி வருமா?

0
12863

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் சில மாற்றத்தைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எஸ் பரத் பேட்டிங்கில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

எனினும் விக்கெட் கீப்பராக கேஸ் பரத் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுடைய வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் செல்லப்பிள்ளை ஆக கருதப்படும் இஷான் கிஷனை டெஸ்ட் அணியில் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இஷான் கிஷன் மோசமான ஃபார்மில் இருந்த போதும் அவருக்கு தொடர்ந்து ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி வந்தார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவர் மீது ரோகித் சர்மாவுக்கு தனி பாசம் உள்ளது. மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அண்டர் 19 பயிற்சியாளராக இருந்தபோது இஷான் கிஷன் அதில் விளையாடியவர். இதனால் தான் டி20 போட்டியில் அவர் மோசமாக விளையாடியும் தொடர்ந்து வாய்ப்பு வந்தது. இந்த சூழ்நிலையில் கேஎல் பரத்தை நீக்கிவிட்டு இஷான் கிஷனை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பந்துக்கு பதிலாக  இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன்  வந்தால் அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும் என ரோகித் கருதுகிறார்.

எனினும் கேஸ் பரத்தை முதல் போட்டியில் விளையாடி அடுத்த போட்டியில் நீக்கினால் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக கே எஸ் பாரத்தை டெல்லி டெஸ்டில் விளையாட வைத்துவிட்டு பிறகு இஷான் கிஷனை மூன்றாவது டெஸ்டில் அணிக்கு கொண்டு வரலாம் என்று யோசனைகள் டிராவிட் ரோகித் சர்மா உள்ளனர். இதேபோன்று காயத்திலிருந்து குணமடைந்துள்ள டெல்லி டெஸ்ட் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -